எலியாவும் போஜனபலியும் Phoenix, Arizona, USA 60-0310 1அல்லேலூயா. ஓ, அது உண்மையல்லவா? “ஆண்டவரே, நான் ஏற்றுக்கொள்கிறேன்.”எதை ஏற்றுக்கொள்கிறேன்? அவர் அளித்துள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும். அவை என்னுடையவை . நாம் உட்காரும் முன்பு, சற்று நேரம் தலைவணங்குவோம். இங்குள்ள கைகுட்டைகளுக்கு ஜெபிக்க நான் மறக்கக் கூடாது. 2எங்கள் கர்த்தாவே, சீயோனின் பாடல்களுக்காகவும், எங்கள் இருதயங்களை பொல்லாப்பினின்று கழுவும் பழமை நாகரீகமான அந்த சுவிசேஷத்திற்காகவும், வேதத்தில் காணப்படும் மிகக் கிருபையுள்ள வாக்குத்தத்தங்கள் எங்களுடையவை என்பதற்காகவும் இன்றிரவு நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். விசுவாசத்தினால் இவ்வாக்குத்தத்தங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறாம். தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். பவுல் வாழ்ந்த சந்ததியில் ஜனங்கள்...அநேகர் வியாதியாயிருந்தனர். அவர்கள் அவனிடம் உறுமால்களையும் கைகுட்டைகளையும் கொண்டு வந்தனர். அவைகளை அவன் தன் சரீரத்தின் மேல் போட்டு, பின்பு அவன் அதை சரீரத்திலிருந்து எடுத்து, வியாதியஸ்தர்களின் மேலும் உபத்திரவப் படுகிறவர்களின் மேலும் போட்டபோது, அசுத்த ஆவிகள் ஜனங்களை விட்டுப் புறப்பட்டுச் சென்றன என்றும், ஜனங்கள் தாங்கள் கர்த்தராகிய இயேசுவின் மேல் கொண்டிருந்த விசுவாசத்தின் விளைவாக சுகமடைந்தனர் என்றும் வேதாகமம் கூறுகின்றது.தேவனே, ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பவுல் இவ்வுலகை விட்டுச் சென்று உமது சமுகத்தில் பிரவேசித் தான். அந்த சந்ததியும் அவனுடன் மறைந்துவிட்டது. ஆனால் நீரோ ஒவ்வொரு சந்ததிக்கும் தேவனாயிருக்கிறீர் இன்றிரவு ஜனங்கள் உம் பேரில் விசுவாசம் வைத்துள்ளனர். அவர்களையும், இந்த உறுமால்களையும்,சரக்குகள் கொண்ட இந்த சிறு பார்சல்களையும் இன்றிரவு உம்மிடம் சமர்ப்பிக்கிறோம்.நீர் எங்கள் ஜெபத்திற்கு பதிலளிப்பீர் என்றும், அவர்கள் சுகமடை வார்கள் என்றும் எங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறோம். ஆண்டவரே, இதை அருள்வீராக! இவைகளை உமது நாமத்தின் மகிமைக்கென்று அவர்களுக்கு அனுப்புகிறோம், உமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில்.ஆமென். 3நீங்கள் உட்காரலாம். இவைகளை இங்கு வைத்தவர்கள், ஆராதனை முடிந்தவுடனே கொண்டு செல்லலாம். இன்றிரவு நான் மிக்க மகிழ்ச்சியாயுள்ளேன், எனக்கு நியமிக்கப் பட்டிருந்த பேட்டிகளை நான் முடித்துக் கொண்டு, ஜெபத்திற்காக உடனே மலைக்குச் சென்றிருந்தேன்.இந்த வறண்ட தேசத்து சூரிய வெளிச்சத்துக்கு நான் வரும் ஒவ்வொரு முறையும், அதனிடம் மீண்டும் மீண்டும் வரவேண்டுமெனும் ஆவல் எனக்கு உண்டா கின்றது.இன்றிரவு ஒரு காரியத்தைக் குறித்து நான் அதிக மகிழ்ச்சியாயுள்ளேன். என் மனைவி...நாங்கள் ஒன்றாக இணைக்கப் பட்ட காலம் முதற்கொண்டு அநேக தேவனுடைய தரிசனங்கள் தோன்றி,அவை நிறைவேறினதை அவள் கண்டிருக்கிறாள்.கர்த்தருடைய தூதன் முதல் முறையாக ஜெபர்ஸன்வில்லில் அந்த நாளில் அந்த ஆற்றில் பிரத்தியட்சமான போது, அவள் அங்கிருந் தாள் 'அசோசியேட்ட பிரஸ்'இச்செய்தியை வெளியிட்டு தேசம் முழுவதிலும் அறிவித்தது... அது 1933ம் ஆண்டு நிகழ்ந்தது அவள் அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்தாள்,அவள் அந்த சத்தத்தைக் கேட்டாள்,ஆனால் ஒளியைக் காணவில்லை. ஆனால் செய்தித்தாளைச் சேர்ந்த புகைப்படம் எடுப்பவர்கள் அந்த ஒளியைக் கண்டனர்,அவள் அப்பொழுது மிகவும் சிறியவளாக இருந்தாள் * பன்னிரண்டு வயதுள்ள சிறுமி. அவள் அந்த ஒளியைக் காண வில்லை. அவள் ஜனங்களைச் கவனித்துக் கொண்டிருந்தாள். அநேகர் மயக்க முற்று விழுந்தனர்.அது ஒரு நிமிடம் அங்கு தங்கி, பின்பு வானத்திற்கு திரும்பிச் சென்று விட்டது. செய்தித்தாள்கள், “உள்நாட்டு பாப்டிஸ்டு போதகர் ஒருவர் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்த போது,ஒரு வினோத ஒளி அவர் மேல் தோன்றினது”என்னும் தலைப்பில் செய்தியை வெளியிட்டன.கனடாவிலும் இச்செய்தி பரவி, அங்கிருந்த செய்தித்தாள்களிலும் அது வெளி யானது. 4மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நான் சென்ற முறை பீனிக்ஸுக்கு வந்திருந்த போது,சகோ. ஜாக் மூர் என்னுடன் அப்பொழுது இருந்தார் என்று நினைக்கிறேன். அவர் ஒருவாறு...என் மனைவி பயந்த சுபாவமுடையவள். அவர் என் மனைவியை எதிர்பாராத விதமாய் மேடைக்கு அழைத்தார், அவள் பயத்தினால் மயங்கி விழுந்திருப்பாள். நான் ஏற்கெனவே மேடைக்குச் சென்ற பிறகு அவள் அங்கு வந்தாள்.சுகமளிக்கும் ஆராதனைக்காக அபிஷேகம் அங்கு தங்கியிருந்தது. முதன் முறையாக அப்படிப்பட்ட அவருடைய சமுகத்தில் அவள் இருந்ததாகக் கூறினாள்.மேலும் நேற்றைய இரவுக்கு முந்தின இரவு அவள் அவரை மேடையின் மேல் கண்டாள்.அவரை அவள் காண்பது அதுவே முதல் முறை.அவர் மேடையின் மேல் நின்று கொண்டிருப்பதை அவள் கண்டாள். அவளை நான் வெளியே சந்தித்தபோது...அவள் கண்களில் நீர் மல்க,''பில்லி, என் வாழ்க்கையில் அதை முதன் முறையாகக் கண்டேன்''என்று கூறினாள்.அவள், ''நீங்கள் ஒரு ஸ்திரீக்கு ஜெபம் செய்து கொண்டிருந்தீர்கள். அப்பொழுது அது அவள் முன்னால் வந்து, சில நொடிகள் அங்கு நின்று பின்பு நகர்ந்து,நீங்கள் நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தது, நீங்கள் பேசி முடித்த வுடன்,அது சென்று விட்டது“ என்றாள். எனவே அதற்காக நான் மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன்- அவளுடைய கண்களுக்கு முன்னால் தோன்றினதால்.பாருங்கள், அந்த சிறு சீமாட்டி என்னுடன் அதிக பிரயாசங்களின் வழியாய் கடந்து வந்திருக்கிறாள். எனவே அவள் கண்ட காட்சிக்காக நான் மகிழ்சியுள்ளவனா யிருக்கிறேன். 5நாளை இரவு சுகமளிக்கும் ஆராதனை. வெள்ளி இரவு சுகமளிக்கும் ஆராதனை இருக்குமென்று இவ்வாரம் நாங்கள் அறிவித்து வந்தோம். நாளை பகல் வந்து விடுங்கள்- அல்லது மாலையில் சீக்கிரமாக ஆறுமணிக்கெல்லாம்.அப்பொழுது நீங்கள் ஆராதனையின் போது தடங்கலாயிருக்க மாட்டீர்கள்.பில்லி, லியோ, ஜீன் இன்னும் மற்றவர்கள் ஜெப அட்டைகளை வழங்கு வார்கள். பின்பு நாங்கள் ஜனங்களை மேடைக்கு அழைத்து அவர்களுக்காக ஜெபிப்போம், நாம்... நான்...இந்த அமெரிக்க கூட்டங்களை ஜனங்கள் போதிக்கப்பட்டுள்ள விதமாகவே நான் நடத்த வேண்டியதாயுள்ளது - அதாவது கைகளை வைத்தல், அது வேதப் பூர்வமானது. ஆனால் அது யூதரின் வழக்கம்.அது புறஜாதி களுக்கல்ல. ஆனால் புறஜாதிகளும் அதே முறையைக் கையாண்டு வருகின்றனர்,''நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்,அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்“என்பது தான் புறஜாதிகளின் முறைமை.அது உண்மை. ஆனால் யூதனுக்கோ, ''நீர் வந்து என் குமாரத்தியின் மேல் உமது கைகளை வையும்.அப்பொழுது பிழைப்பாள்”என்பதே. அதுவே அவர்களுடைய வழக்கமா யிருந்தது.அது புறஜாதிகளுக்கல்ல. 6ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு மணிநேரமும்,இரவும் பகலும் பரிசுத்த ஆவி வந்து, இக்கட்டிடத்தில் அசைவாடி,இருதயங்களில் மறைந்துள்ள இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்,நீங்கள் எல்லா சமயங்களிலும் அதைக் காண்கிறீர்கள். தேவனு டைய சமுகம் இங்குள்ளது என்பதைக் காண்பிக்கவே அவ்வாறு நிகழ்கின்றது.அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களானால், அங்கேயே ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு,இப்பொழுது ஆயிரத்து தொளாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது. நீங்கள் பெற வேண்டிய இரட்சிப்புக்கான கிரயம் செலுத்தப்பட்டுவிட்டது.நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியது மாத்திரமே. உங்களுடைய இரட்சிப்புக்கான கிரயம் செலுத்துப்பட்டுவிட்டு ஆயிரத்து தொளாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகாமாகிவிட்டது,இக்கூட்டங்களில், “அது உங்களைவிசுவாசிக்கச் செய்கிறதா?” என்று நான் கேட்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பாருங்கள், அற்புதங்களும் அடையாளங்களும் சுகமளித்தலுக்கோ அல்லது இரட்சிப்புக்கோ அல்ல, தேவனுடைய சமுகம் இங்குள்ளது என்பதை ஜனங்களுக்கு அறிவுறுத்தி அவர்களுக்குப் புரியச் செய்யவே இவை நிகழ்கின்றன. அவர்... அவர் ஒருக்கால்...அது எப்படியாகும்?அது அற்புதங்களைக் காட்டிலும் மேலானது. 7நாம் இப்பொழுதுதான் அற்புதங்களைக் காணத்தொடங்கியிருக்கிறோம். அது ஒரு நபரிடம் வரும்போது, அநேகர் டோலிகளி லிருந்தும் சக்கர நாற்காலிகளிலிருந்தும் எழுந்து நடந்து செல் கின்றனர். அது ஒரு அற்புதம் என்று மாத்திரம் சொல்லி விடமுடியாது. பாருங்கள், கிறிஸ்தவ விஞ்ஞானம் கூட இப்படிப் பட்டவைகளைச் செய்கின்றது- உங்கள் மனநிலையை...அவர்கள் நீங்கள் சிந்திக்கும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டுமென் கின்றனர்.நான் அதை நம்புவதில்லை. அது விசுவாசத்தின் காரணமாகவே நிகழ்கின்றது என்று நான் நம்புகிறேன். 8நான் பிரான்சு தேசத்திலுள்ள ஆல் சேஸ்- லோரேய்னுக்கு சென்றிருந்தேன்.நான் பாரிஸ் பட்டினத்துக்கு சென்றிருந்தேன்.அங்கு மரித்து போன ஒரு பெண்ணை அடக்கம் செய்திருந்தனர். அவர்கள் ஒரு பாறையை அங்கு உரசுகின்றனர். அங்கு முடவர்களும் சப்பாணிகளும் சென்று படுத்து, அவள் கல்றையின் மேலிருக்கும் பாறையை உரசி, சுகமடைந்து திரும்பிச் சென்றனர். பாருங்கள், அவள் மரித்தவள்.அவள் மத்தியஸ்தம் செய்யமுடியாது... தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே,அது கிறிஸ்து இயேசு. நான் கத்தோலிக்க குடும்பத்திலிருந்து வந்தவன்.எனவே அவர்கள் மரித்தவர்களின் மேல் நம்பிக்கை வைத்துள்ளளனர் என்று நானறிவேன்.மரித்தோரின் ஆவிகள் அவர்களுக்காக வேண்டிக்கொள்வதாக அவர்கள் விசுவாசிக்கின்றனர்.வெவ்வேறு ஆவிகள்- சில ஆவிகள் அரசியலுக்காக; வேறு சில மற்றவை களுக்காக.என்னைப் பொறுத்தவரையில் அது இறந்தவர்களின் ஆவிகளுடன் தொடர்பு கொள்ளுதலாகும் (Spiritualism). உங்களை நான் புண்படுத்த வில்லையென்று எண்ணுகிறேன்.ஆனால் நான் உண்மையைக் கூறவேண்டும் பாருங்கள், இறந்தவர்களுடன் தொடர்பு கொண்டு பேசும் எதுவும் அதுவே. 9மெக்ஸிகோவில் அவர்கள் என்னை, “அப்படியானால் இயேசுவைக் குறித்து என்ன?” என்று கேட்டனர். அதற்கு நான்,“அவர் மரித்தோருடன் இல்லை, அவர் உயிர்த்தெழுந்து விட்டார். அவர் சதாகாலங்களிலும் உயிரோடி ருக்கிறார்”என்று பதிலளித்தேன்.பாருங்கள்? அவர் மரித்த நிலையில் இல்லாமல் ஜீவனுள்ளவராயிருக்கிறார். மற்றவர்கள் கடந்து சென்று விட்டனர்,“அங்குள்ளவர்கள் இங்கு வர முடியாது.இங்குள்ளவர்கள் அங்கு போக முடியாது”என்று வேதம் கூறுகின்றது,உயிருள்ள எந்த மனிதனும் அதை கடந்து செல்ல வில்லை, இனி செல்லவும் முடியாது. இயேசு அவ்வாறு கூறியுள்ளார். எனவே அத்துடன் அது முடிவு பெறுகின்றது. இப்படிப்பட்டவை கிரியை செய்வதை நாம் காண்கிறோம்.ஒவ்வொரு இரவும் பரிசுத்த ஆவி உங்களை இங்கே தம்முடைய பிரசன்னத்தின் சமுகத்தண்டை நீங்கள் வரத்தக்கதாக முயல்கிறார்- மனிதனின் சமுகத்துக்கு அல்ல. மனிதன் தன்னை தாழ்த்த மாத்திரம் முடியும் - அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள வரத்தின் மூலம் அவன் தன்னை ஆவியின் பரிமாணத்துக்கு ஒப்புவித்து, அது தேவனை உங்களுக்கு திறந்து காண்பிக்கும். ஆனால் நீங்கள் அதை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளாமல் போனால்,அது ஒருக்காலும் கிரியை செய்யாது.நீங்கள் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே, அது கிரியை செய்யும், இங்கு அமர்ந்துள்ள நீங்கள் ஒவ்வொருவரும் விசுவாசிக்காமல் போனால்- ஒரு வார்த்தையும் கூட விசுவாசிக் காமல் போனால்- அது ஒருக்காலும் கிரியை செய்யாது. இயேசு தமது சொந்த ஊராரிடத்திற்கு, தம்முடைய சொந்த ஊருக்குச் சென்றபோது,அவர்களுடைய அவிசுவாசத்தின் நிமித்தம் அவர் அநேக பெரிய அற்புதங்களை செய்யக் கூடாமல் போயிற்று.அன்று அவர் செய்ய முடியவில்லை என்றால், இன்றும் அவிசுவாசத் தின் காரணமாக அவரால் செய்யமுடியாது.பாருங்கள், அது உங்கள் விசுவாசம். எனவே நீங்களும் நானும் பரிசுத்த ஆவியுடன் ஒன்று சேர்ந்து இவைகளை நிறை வேற்று கிறவர்களாயிருக்கிறோம்.தேவன் இங்குள்ளார் என்றும், அவர் தமது வார்த்தையை நிறைவேற்றுகிறார் என்பதும் என்னை மகிழ்விக்கிறது.உங்களையும் மகிழ்விக்கிறது. 10பரிசுத்த ஆவி இக்கூட்டங்களில் வந்து, கடைசி நாட்களில் என்ன நிகழும் என்று அவர் வேதத்தில் கூறியுள்ளவைகளை அப்படியே நிறைவேற்றி, இவ்வுலகில் அவர் இருந்தபோது செய்தது போலவே, இப்பொழுதும் ஜனக்கூட்டத்தின் மத்தியில் சென்று, அவர்களுடைய இருதயத்தின் சிந்தனைகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறார் என்னும் போது,அதை எப்படி ஒருவர் சந்தேகிக்க முடியும்? பாருங்கள், அது பரிபூரண அற்புதம். ஒரு சப்பாணி சுகமடைந்து நடப்பதைக் காட்டிலும் அது மேலான அற்புதம். ஏனெனில் ஆவிக்குரிய வல்லமையில்லாமல் அது நிகழ்வதென்பது கூடாத காரியம். அது நிகழ வேண்டுமானால், அது ஆவிக்குரிய வல்லமையாகத்தான் இருக்கவேண்டும். மேலும் வேதம் வாக்களித்தது நிறைவேறுவதை நீங்கள் கண் கூடாகக் காண்கிறீர்கள்...நாம் எதை விசுவிசுவாசிக்கிறோமோ அது எனவே கூச்சலிடுவதைக் காட்டிலும் இது மேலான அற்புதம்.பாருங்கள்? அந்நியபாஷை பேசுவதை காட்டிலும் இது மேலான அற்புதம், பவுல் அவ்வாறு கூறியுள்ளான். இது உண்மையான பரிசுத்த ஆவியின் வரங்களாகிய அந்நியபாஷை பேசுதல் போன்ற வைகளைக் காட்டிலும் மேலான அற்புதம்.நாம் கடைசி அற்புதத்தில் இருக்கிறோம். வேதம் அவ்வாறு முன்னுரைத்துள்ளது. 11எனவே, ஜெபவரிசையில் வந்து கைகள் வைக்கப்பட நாளை இரவு வரை நாங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள்மேல் கைகளை வைத்தல் என்பது,என்னைப் பொறுத்த வரையில் இருதயத்தின் சிந்தனைகளைப் பகுத்தறிதலைக் காட்டிலும் ஒன்றும் அதிகம் செய்துவிடப் போவதில்லை.நீங்கள் இப்பொழுதே அதை ஏற்றுக்கொண்டு,அதை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள். அது உங்களுடையது.உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். நாளை இரவு நீங்கள்...''நீங்கள் உலகமெங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.விசுவாசிக் கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும் என்று வேதம் கூறுகின்றது- எல்லா அடையாளங்களும்.பின்பு அவர்,''வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள்,அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்“ என்றார் (மாற். 16:18). அவர்கள்... இந்த அடையாளங்கள் விசுவாசிகளை பின்தொடரும் சரி. நாம் விசுவாசிகள்,எனவே ஒவ்வொரு இரவும் வியாதியஸ்தர் மேல் நாங்கள் கைகளை வைத்தபோது,தேவன் மகத்தான அற்புதங்களை அவர்களில் நடப்பித்தார். கைக்குட்டைகளின் மேல் ஜெபம் செய்து வியாதியஸ்தருக்கு அனுப்பினபோதும்,மகத்தான அற்புதங்கள் நிகழ்ந்தன. இருதயத்தின் சிந்தனைகளைப் பகுத் தறிந்ததன் மூலமாகவும் மகத்தான அற்புதங்கள் நிகழ்ந்தன. பாருங்கள் ,இவையனைத்தும் ஒருங்கே தேவனுடைய மகிமைக்காக கிரியை செய்கின்றன. இது மனிதனுக்காக அல்ல, சபைக்காக அல்ல, தேவனுடைய மகிமைக்காவே.தேவனுடைய மகிமை! 12இன்றிரவு நாம் வேதாகமத்தை திறப்பதற்கு முன்பு...ஓ, நாம் வேதாகமத்தின் பக்கங்களை இப்படி திருப்பலாம். ஆனால் தேவன் மாத்திரமே அதை திறக்க வேண்டியவராயிருக்கிறார்.ஏனெனில் வேதவாக்கியங்கள் தனிப்பட்ட எவராலும் வியாக்கி யானம் செய்யப்படக் கூடாது.வேதாகமத்தை எழுதின பரிசுத்த ஆவி மாத்திரமே அதை விளக்க வேண்டியவராயிருக்கிறார்.எனவே இப்பொழுது நாம் ஜெபம் செய்யும் போது தலை வணங்குவோம்.உங்களில் எத்தனைபேர் ஜெபத்தில் நினைவு கூரப்பட வேண்டு மென்று விரும்புகிறீர்கள்?உங்கள் கைகளையுயர்த்தி தெரிவிப் பீர்களா?அது என்னவாயிருந்தாலும்,தேவனே, நீர் நோக்கிப் பாரும், நம்மெல்லோருக்கும் தேவைகள் உண்டு. இல்லையா? நண்பர்களே, எனக்கும் தேவையுண்டு.என் கரத்தையும் நான் உயர்த்தியுள்ளேன். 13பரலோகப் பிதாவே, தாழ்மையுடனும், அமைதியுடனும், பயபக்தியுடனும் உமது மகத்தான, கம்பீரமான சமுகத் தண்டை வந்திருக்கிறோம்,அப்படி வருவதற்கு முன்பு, ஒரு காரியம் நிகழும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.நீர் இங்கிருக்கிறீர்,ஏனெனில் நீர் இவ்விடம் விட்டு செல்லும் முன்பு,“இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ,அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்''என்றும் ''உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப் போகிற எந்த காரியத்தைக் குறித்தாகிலும் ஒருமனப்பட்டிருந்தால்,அது அவர்களுக்கு உண்டாகும்” என்றும் வாக்களித்து விட்டு சென்றீர்.இந்த வாக்குத்தத்தங்கள் உமது இரத்தத்தினால் சம்பாதித்து கொடுத்தீர்.இன்றிரவு கைகளையுயர்த்தின ஒவ்வொரு ஆணும்,பெண்ணும், குழந்தையும் - அவர்களுடைய இருதயத்தை நீர் அறிந்திருக்கிறீர்- அவர்கள் கேட்டதைப் பெற்றுக்கொள்வார் களாக!கர்த்தாவே, இதை அருள்வீராக. நாங்கள் தேவையுள்ள ஜனங்கள்.பயங்கரமான உமது எதிரியுடன் நாங்கள் இந்த இருள் சூழ்ந்த உலகில் நடமாடிக்கொண்டிருக்கிறோம்.உமது பரிசுத்த ஆவி இல்லாமல் அவனை எங்களால் எதிர்க்க இயலாது.எனவே நீர் எங்களுக்கு முன்னால் சென்று பாதையை செவ்வையாக்குவீர் என்று நம்பி விசுவாசத்தில் செல்கிறோம், களைப்புற்ற எங்கள் பாதங்களுக்கு, பாதையில் எத்தனையோ படுகுழிகள் வைக்கப்பட்டுள்ளன.ஆனால் மரணத் தையும், பாதாளத்தையும், கல்லறையையும் மேற்கொண்ட அவருடைய இரத்தம் தோய்ந்த அடிச்சுவடுகளை நாங்கள் பின்பற்ற முயல்கிறோம். ஆண்டவரே, இன்றிரவு உமது பரிசுத்த ஆவியின் மூலம், பேசப்படவேண்டிய வார்த்தைகளுக்கு எங்களை வழி நடத்தி, இந்த வார்த்தைகள் தேவையுள்ளோரின் இருதயங்களுக்கு செல்லும்படி அவைகளை வழி நடத்தும்,ஆண்டவரே, கூட்டத் திற்கு பிறகு எங்கள் வீடுகளுக்கு நாங்கள் செல்லும் போது,எம்மாவூர் சீஷர்கள் கூறினது போன்று,“அவர் வழியிலே நம் முடனே பேசினபோது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா?' என்று கூற அருள்புரியும். இதை இயேசுவின் நாமத்திலும் அவருடைய நிமித்தமாகவும் கேட்கிறோம். ஆமென். 14வேதாகமம் வைத்திருப்போர் என்னுடன் கூட சேர்ந்து1 இராஜாக்கள் புத்தகத்துக்கு திருப்புங்கள், நாம் 17ம் வசனத்தின்...இல்லை, 17ம் அதிகாரத்திலிருந்து ஒரு பாகத்தை படிக்க விரும்பு கிறேன். நான் 14ம் வசனத்தில் தொடங்கப் போகிறேன்,14ம், 15ம், 16ம் வசனங்கள்,1 இராஜாக்கள் 17ம் அதிகாரம். “கர்த்தர் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் பானையின் மா செலவழிந்து போவதும் இல்லை;கலசத்தின் எண்ணெய் குறைந்து போவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அவள் போய்,எலியாவின் சொற்படி செய்தாள். அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேக நாள் சாப்பிட்டார்கள். கர்த்தர் எலியாவைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்து போகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்து போகவும் இல்லை.“ 15அவள் உறக்கத்தினின்று எழுந்த போது, காலை வெளிச்சம் வந்திருக்கும், அவளுடைய அறையில் கவலையுற்ற சிறு அழுகை குரலை அவள் கேட்டு,தன் களைப்புற்ற தலையை தலையணையின் மேல் இங்குமங்கும் திருப்பினாள், இரவு முழுவதும் அவளுக்கு உறக்கம் வரவில்லை, இந்த பரிதாபத்தின் காரணமாக அவள் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். அவளுடைய சிறு மகன் இருபது அல்லது முப்பது நிமிடங்கள் உறங்கி விட்டு மறுபடியும் எழுந்து விட்டான்.அவனுடைய சிறு குரல், “அம்மா, மறுபடியும் உணவு அறைக்கு (Pantury) சென்று, ஒரு சிறு அப்பத்துண்டு இருக்கிறதா என்று பார்க்கமாட்டீர்களா?எனக்கு அதிக பசி எடுக்கிறது.என்னால் தூங்க முடியவில்லை'' என்று கூறுவது என் காதில் விழுகிறது. அவள் அவனுடைய சிறு முகத்தைப் பார்த்தபோது...அவன் கன்னங்கள் குழி விழுந்திருந்தன,அவனுடைய கண்கள் மஞ்சளடைந்திருந்தன, அவன் தலைமயிர் வெட்டப்படாததனால் நீண்டு வளர்ந்திருந்தது. அவனுடைய இரவு உடை கிழிந்திருந்தது.அவன் கண்களிலிருந்து தோன்றிய பெரிய கண்ணீர் துளிகள் அவன் சிறு முகத்தில் வடிந்து கொண்டிருந்தன. அவள் அவன் கன்னத்தை மெல்லத் தட்டி, “அன்பே, சூழ்நிலையைப் புரிந்து கொள். நீ போய் தூங்கு என்றாள்''. 16மூன்று ஆண்டுகளாக பூமியில் மழை பெய்யவில்லை.அவள் தரையில் முழங்கால்படியிட்டு கதறி தேவனிடம் முறையிடு வதை என்னால் காணமுடிகின்றது, “ஓ, தேவனாகிய கர்த்தாவே,யேகோவாவே, நீர் எங்கள் பிதாக்களின் தேவன்.உமது பிள்ளை களை நீர் இத்தனை ஆண்டுகளாக போஷித்து பாதுகாத்து வந்திருக்கிறீர், உமக்கு முன்பாக நான் உண்மையும் உத்தமுமாக வாழ பிரயாசப்பட்டேன். இப்பொழுது என் மகன் பசியால் வாடி, உண்பதற்கு ஏதாவது வேண்டுமென்று அழுகிறான்.அவனுக்கு கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை.அநேக வாரங்களாக,மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறைமாத்திரமே நாங்கள் உணவு அருந்தி வந்தோம், இப்பொழுது எல்லாம் செலவழிந்து விட்டது.ஒரு கைப்பிடி மாவும், ஒரு கரண்டி எண்ணெயும் தவிர வேறொன்றும் இல்லை,இரவில் மரிக்க வேண்டாமென்று கருதி, பகல் வரை அதை வைத்திருக்க நினைக்கிறேன். ஓ, தேவனே நான் என்ன பொல்லாப்பு செய்தேன்? உமது பணிவிடைக்காரியாகிய நான் உண்மையாக வாழ்ந்து வந்தேன்,தேவனுக்காக ஏறெடுக்கப்பட்ட போரில் என் கணவர் மாண்டு போனார், அநேக ஆண்டுகள் நான் விதவையாயிருக் கிறேன். நான் உத்தமமாக வாழ்ந்து உமது கற்பனைகளைக் கைக் கொண்டு வந்திருக்கிறேன்.நான் போவதற்கு சமயம் வந்து விட்டால் பரவாயில்லை.ஆனால் என் சிறு மகன் உணவுக்காக கெஞ்சி அழும் போது,அவனுக்கு கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை என்பது என் இருதயத்தைப் பிளந்து விடுகிறது”, என்று அவள் மன்றாடினாள். 17அவள் ஜெபம் பண்ணி முடித்து தரையிலிருந்து எழுந்தாள். அவள் மகன் மறுபடியுமாக சற்று நேரம் உறங்கிக் கொண்டிருந் தான்.அவள் கரங்களையுயர்த்தி ஜெபம் செய்தாள்.அவள் உடுத்தியிருந்த இரவு ஆடையின் கைபாகம் முழுவதும் கிழிந் திருந்தது. அவள் ஜன்னல் அருகே சென்று எட்டிப்பார்த்தாள். அது காலை விடியும் நேரமாக இருந்தது. ஓ, அங்கு உஷ்ணமாக இருந்தது. நியாயத்தீர்ப்பின் உஷ்ணக் காற்று தேவனை மறந்த தேசத்தின் மேல் வீசிக்கொண்டிருந்தது.அது, இஸ்ரவேலிலேயே மிக்க கொடுரமான, பொல்லாங்கான ஆகாப் ராஜாவின் அரசாட்சியின் போது, அவன் யேசபேல் என்னும் பாவியை விவாகம் செய்திருந்தான். ''அவள் விக்கிரகாராதனைக்காரி. அத்தகைய ஒரு கலப்பு திருமணம் வெற்றிகரமாக இருந்ததே கிடையாது. அது வெற்றி கரமாக அமைய முடியாது. ஒன்று, ஸ்திரீ மனிதனின் வழிக்கு வரவேண்டும்,அல்லது மனிதன் ஸ்திரீயின் வழிக்கு வரவேண்டும். யேசபேல் கவர்ச்சி மிக்க அழகிய பெண், ஆகாப் வெதுவெதுப்பான ஒரு விசுவாசி. அவன் அவளுடைய கருத்துக்களுக்கு இணங்கி, ''ஓ, மதம் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல, நான் ஒரு ராஜா“ என்றான். பல ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் தேவனுடைய பலிபீடத்தை தகர்த்து போட்டு, பாகாலின் பலிபீடத்தை எழுப்பியிருந்தார்கள். உண்மையான மார்க்கத்துக்கு விரோதமான அறைகூவல் பெருகினபடியால், உண்மையான ஊழியக்காரர்களும் நெருக்கத்தின் காரணமாக தங்கள் முயற்சியை கைவிட்டனர். 18சில நாட்களுக்கு முன்பு,இந்நாட்களின் போதகர்களைக் குறித்து ஒரு காரியத்தைக் குறிப்பிட்டேன்.அப்பொழுது ஒரு கூட்டம் போதகர்கள் என்னை சந்தித்து,“சகோ. பிரன்ஹாமே, எங்கள் சபையோர் எங்கள் மேல் சார்ந்துள்ளனர்” என்றனர். அது தான் காரணம். போதகர்கள் சபையோரை பிரீதிபடுத்தாவிட்டால், அவர்கள் வெளி நடந்து விடுவார்கள். போதகர்கள் ராஜாவின் அரசாட்சிக்கு இசைந்து பாவத்தை அனுமதிப்பார்களானால், அதற்கு எல்லையே இல்லை. அது இன்றைய காட்சியுடன் வெகுவாய் பொருந்துகிறது. ஏனெனில் நமது தேசம் இத்தகைய செயல்களை அங்கீகரித்துள்ளது. ஜனங்கள் பிரபலமாக வேண்டுமென்று நினைக்கின்றனர்.“தேசம் அவ்வாறு கூறுமென்றால், அது சரியே” என்று அவர்கள் எண்ணுகின்றனர். அப்படித்தான் இன்று அவர்கள் கூறுகின்றனர். 'மது விற்பதில் தவறில்லை என்று தேசம் கூறுமானால், மது அருந்துவது சரியே. அரை நிர்வாணமாக பெண்கள் வீதிகளில் நடக்க தேசம் அனுமதித்து, சட்டம் அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்க்காதிருக்கும் பட்சத்தில், அப்படி செய்வது சரியே“ என்று அவர்கள் நினைக்கின்றனர். அது தேசத்திற்கு தவறாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால் தேவனுடைய மகத்தான புத்தகங்களில், அதற்கு நீங்கள் உத்திரவாதமுள்ளவர்கள் என்று எழுதப்பட்டு, தேவனுக்கு முன்பாக இதற்கு பதில் கூறவேண்டியவர்களாயிருக்கிறீர்கள். நெருக்கத்தின் காரணமாக அவர்களும் சம்மதிக்க வேண்டியதாயுள்ளது. 19தேசம் நாளடைவில் செழிப்படைந்தது. செழிப்பு தேவன் அவர்களோடுகூட இருக்கிறார் என்பதற்கு அடையாளம் என்று அவர்கள் எண்ணினர். அது முற்றிலும் உண்மையல்ல. தேவன் உங்களிடம் வருகிறார். ஒரு பழமொழி உண்டு - “தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்பவர்க்கு தேவன் உதவி செய்கிறார்” என்னும் தேவனைக் கனவீனப்படுத்தும் பழமொழி.அது தேவனைக் கனவீனப்படுத்துவதாகும். தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ள முடியாதவர்களுக்கே தேவன் உதவி செய்கிறார். இரக்கம் தேவைப்படுகிறவர்களுக்கு அவர் தேவனாயிருக்கிறார். அவர் இரக்கமுள்ள தேவன். அந்த பழமொழி அவ்வாறு கூறுகின்றதே, உங்களுக்கு நீங்களே உதவி செய்துகொள்ள முடியுமானால், உங்களுக்கு தேவனுடைய உதவி அவசியமில்லையே! தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ள முடியாதவர்களுக்கு அவர் உதவி செய்கிறார். 20அவர்கள் நன்றாக உணவு அருந்தி, நன்றாக உடை உடுத்தினால், எல்லாமே சரியாகத்தான் இருக்க வேண்டுமென்று தேசம் எண்ணியிருந்தது. ஆனால் அங்கு ஒருவன் இன்னும் பழமை நாகரீகமுடன் வாழ்ந்து வந்தான். பழமை நாகரீகம் கொண்ட தேவன் ஒருவர் இருக்கிறார் என்றும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனாகிய அவர் பரிசுத்தமுள்ளவர் என்றும், தமது பரிசுத்தத்துக்கு முற்றிலும் அர்ப்பணிப்பை அவர் எதிர்பார்க்கிறார் என்றும் அவன் விசுவாசித்தான், ஆனால் யேசபேலும் அவளுடைய நவீன கருத்துக்கள் கொண்ட குழுவும் அவனை வெறுத்தனர், அவன் அவர்களுடைய போதகன், ஆனால் அவர்கள் அதை விசுவாசிக்கவில்லை. எனவே தனது ஜீவனைக் காத்துக்கொள்ள அவன் ஒளிந்துகொள்ள வேண்டியதாயிருந்தது. 21தேவன் அவனை மலையின் மேல் அனுப்பினார். அவர் அவனுக்கு ஒரு செய்தியைக் கொடுத்து, ''நீ போய் அந்த பொல்லாத ராஜாவிடம், நீ கட்டளையிட்டாலன்றி தேசத்தில் மழையும் பெய்யாது, பனியும் பெய்யாது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்“ என்றார். சமயம் வரும்போது மழையை வருவிக்க எலியாவின் வாயில் அதை போட்டார். அவனிடம் வானத்தின் திறவுகோல் இருந்தது. அதை அவன் பூட்டவும் மூடியும், திறக்கவும் முடியும். அவர் அவனிடம்,”நீ இந்த குழப்பத்தை விட்டு புறப்பட்டு வனாந்தரத்துக்கு செல்ல வேண்டும். அவர்களை விட்டு வெளியே வா. அவர்களிடம் நீ பிரசங்கம் செய்தாய். ஆனால் அவர்கள் உனக்கு செவிகொடுக்க மாட்டார்கள், அவர்கள் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகின்றனர். நீ வனாந்தரத்துக்கு சென்று கேரீத் ஆற்றண்டையில் உட்கார்ந்து கொண்டிரு. உன்னைப் போஷிக்க நான் காகங்களுக்கு ஏற்கனவே கட்டளையிட்டு விட்டேன்'' என்றார். ஓ, ஜனங்கள் செய்யாவிட்டால் அதைச் செய்ய தேவனுக்கு காகங்கள் உள்ளன! 22''தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்'' என்று யோவான் ஸ்நானன் கூறினான். இயேசு,“இவர்கள் பேசமாலிருந்தால் கல்லுகளே கூப்பிடும்”என்றார். தேவன் தாம் விரும்புவதைச் செய்ய முடியும். அவர் ''நான் காகங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறேன். அவைகள் உன்னைப் போஷிக்கும்'' என்றார். காகங்கள் அவனுக்கு இறைச்சியும் அப்பமும் கொண்டு வந்தன. ஒருமுறை ஒருவன் என்னிடம், “சகோ. பிரன்ஹாமே காகங்களுக்கு இறைச்சியும் அப்பமும் எங்கிருந்து கிடைத்தன?'' என்று கேட்டார். நான், “எனக்குத் தெரியாது, அவை கொண்டு வந்தன என்று மாத்திரம் தெரியும். இயேசு ஐந்து அப்பமும் இரண்டு மீன்களையும் எடுத்து ஐயாயிரம் பேர்களைப் போஷித்தாரே. அதே இடத்திலிருந்து தான் இந்த காகங்களும் அதை பெற்றிருக்க வேண்டும். சர்வவல்லமையுள்ள தேவனின் அதே சிருஷ்டிப்பின் கரத்திலிருந்து அவை வந்திருக்க வேண்டும்'' என்று விடையளித்தேன். காகங்கள் இறைச்சியும் அப்பமும் கொண்டு வந்து எலியாவிடம் கொடுத்தன. அவன் அதை புசித்து விட்டு குனிந்து அந்த ஊற்றின் தண்ணீரைக் குடித்தான். தேவன் தம்முடைய தீர்க்கதரிசியை இளைப்பாறப் பண்ணினார். 23ஓ, தப்பிப்பதற்கு தேவன் ஒரு வழியை வைத்திருக்கிறார் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவன் பைத்தியக்காரன் என்று அவர்கள் எண்ணியிருந்தனர். “அந்த வயோதிப தீர்க்கதரிசி மகிழ்ச்சியை குலைத்து போடுபவன்”என்று அவனை இகழ்ந்தனர். தங்கள் சிறு மகிழ்ச்சி விருந்துகளில் கிடைக்கும் மகிழ்ச்சியை அவன் குலைத்துப் போடப்பார்க்கிறான். அது பாவம் என்று எப்பொழுதும் கூறுகிறான் என்று அவர்கள் நினைத்தனர். அவன் தேவனுடைய கட்டளையைக் கைக்கொண்டு மலையின்மேல் சென்று, தேசத்திலேயே மிகவும் வறட்சியான, உயரமான இடத்தில் உட்கார்ந்தான். ஆனால் தேவனோ ஆற்றில் தண்ணீர் ஓடும்படி செய்தார். ஆனால் கீழே ஜனங்கள் நாவரண்டு, தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருந்தனர். 24உங்களுக்குத் தெரியுமா? ஜெபத்துக்கு பதிலளிக்க தேவன் ஒரு பிரத்தியேக முறையைக் கையாளுகிறார். இந்த சிறு ஸ்திரீ உண்மையாக வாழ்ந்து வந்தாள். அவள் மறுபடியும் விவாகம் செய்து கொள்ளவில்லை. அவளுடைய கணவனை மகிமையில் சந்திக்க கருதி அவள் தனிமையில் வாழ்ந்தாள்.அவள் கௌரவமான ஒரு பெண், வாரங்கள் கடந்தபோது, பானையிலுள்ள மாவு சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்தது. அவள் தொடர்ந்து ஜெபம் செய்த போதிலும், எவ்விதத்திலும் நம்பிக்கை தோன்றுவதாகத் தெரியவில்லை, இதிலிருந்து நாம் ஒரு பாடத்தைப் படிக்கலாம். நீங்கள் ஜெபம் செய்து, தேவன் உங்களிடம் எதிர்பார்க்கும் எல்லா அவசியங்களையும் (requirements) நீங்கள் பெற்றிருந்தும், அவர் ஒன்றும் பேசாமல் இன்னும் மெளனமாயிருப்பாரானால்; என்ன நேரிடுகிறது? நீங்கள் அவர் எதிர்பார்க்கும் அவசியங்கள் அனைத்தையும் பெற்றிருந்து, உங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் செய்யும்போது, விசுவாசம் தள்ளாடுவதில்லை. அது அமரிக்கையாயிருந்து, அது நிறைவேறும் என்பதை அறிந்துள்ளது. விசுவாசம் காலாகாலங்களில் உள்ள அந்த கன்மலையை (Rock of Ages) நித்தியமாகப் பற்றிக்கொண்டு அங்கிருந்து அசைவதில்லை. 'விசுவாசம்' என்று அழைக்கப்படும் அந்த பலவான்'' விசுவாசத்துக்கு நெஞ்சில் மயிர் முளைத்துள்ளது'' என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. அந்த பலவான் பேசும்போது, எல்லாமே வாயை மூடி விடும். விசுவாம் “வாயை மூடு” என்று கூறினால், எல்லாமே நின்று விடும். ஏனெனில் அதுதான் முதலாளி. 25அவள் எல்லா அவசியங்களையும் பெற்றிருந்தாள். அவள் சுத்தமாகவும், நாணயமாகவும், கௌரமாகவும் வாழ்ந்தாள். தேவனுடைய அவசியங்கள் அனைத்தையும் அவள் பெற்றிருந்தாள். ஆனாலும் அவர் அமைதியாயிருந்தது போல் காணப்பட்டது. உங்களைச் சோதிக்க தேவன் சில சமயங்களில் அப்படி செய்வதுண்டு. அது உங்களுக்கு எத்தகைய பாதிப்பை (reaction) உண்டாக்குகிறது என்று அவர் காண விரும்புகிறார். அதை மறந்துவிடாதீர்கள்! நீங்கள் மேடைக்கு வந்து, உங்கள் மேல் கைகள் வைக்கப்பட்டு ஜெபம் ஏறெடுக்கப்பட்ட பின்பு ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல் காணப்பட்டால், அது விசுவாசத்தை சிறிது கூட நிறுத்திவிடாது. தேவனுடைய அவசியங்களை நீங்கள் கொண்டிருப்பீர்களானால்! நீங்கள் தேவனிடம் ஏதாவதொன்றை மறைத்து வைத்திருந்தால், உங்கள் இருதயம் உங்களைக் குற்றப்படுத்தும். 'நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால்''. நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்குமானால், மேடைக்கு வர அவசியமேயில்லை, தேவனிடத்தில் ஒன்றையும் கேட்க அவசியமேயில்லை, ஏனெனில் அதைப் பெற்றுக்கொள்ள உங்களுக்கு போதிய விசுவாசம் இருக்காது. ஆனால் நீங்கள் தேவனுடைய அவசியங்கள் அனைத்தையும் சந்தித்திருந்தால், அப்பொழுது விசுவாசம் முன்னால் அடி எடுத்து வைத்து, ''தேவன் தேவனாயிருக்கிறார். நான் எல்லா அவசியங்களையும் சந்தித்து விட்டேன்'' என்று கூறும். 26''கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஒடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்'' என்று வேதம் கூறுகின்றது. அந்தப் பாடல் “எனக்குக் கற்பியும் ஆண்டவரே, காத்திருக்க எனக்குக் கற்பியும்” என்று உரைக்கின்றது. என் ஆத்துமாவை கல்வாரி இரத்தத்தினால் கழுவி, எல்லா அவசியங்களையும் நான் பெற்றிருந்து, சுற்றிலுமுள்ள பாவங்களை எரித்து விட்டு, “ஆண்டவரே, என் கரங்களில் நான் ஒன்றையும் கொண்டு வரவில்லை. வெறுமனே உமது சிலுவைய கட்டித்தழுவிக் கொண்டிருக்கிறேன். ஆண்டவரே, அதை நீர் வாக்களித்துள்ளீர்” என்று கூறவேண்டும். அதுவே நிபந்தனையாகும். நான் தனிமையாக பிரித்துக் கொள்பவன் (isola- tionist) என்று ஜனங்கள் கருதுவதற்கு அதுவே காரணம், ஆனால் அறையிலோ அல்லது வனாந்தரத்திலோ அந்த நிலைக்கு வந்த பின்பு தான் அந்த பிரசங்க பீடத்தில் ஏறமுடியும். ஏனெனில் சாத்தான் எப்பொழுதும் காரியங்களைத் தலைகீழாக்க தனது குட்டிப் பிசாசுகளை(imps) அனுப்பிக் கொண்டிருக்கிறான். எனவே நீங்கள் எப்பொழுதும் சிலுவையைக் கட்டித்தழுவினவர்களாக இருக்க வேண்டும், உங்கள் திறமையின் பேரிலோ அல்லது உங்கள் கருத்துக்களின் பேரிலோ நீங்கள் சார்ந்திராமல், அவருடைய நித்திய கரத்தின் மேல் சாய்ந்து கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு அறிவுத்திறன் உள்ளதாகவோ, சுயசிந்தை உள்ளதாகவோ உரிமை பாராட்டாமல், உங்களை நீங்கள் திறந்து கொடுத்து, பரிசுத்த ஆவியானவர் பேச விட்டுக் கொடுக்கவேண்டும். அந்த நிலைக்கு சபை வர வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அந்நிலைக்கு வாருங்கள். 27தேவன் உங்களை சோதிக்கிறார். தேவனிடத்தில் வரும் ஒவ்வொரு புத்திரனும் முதலில் சோதிக்கப்பட்டு, அவன் சிட்சையை சகிக்கிறவனா என்பதை அறிந்து கொள்ள சிட்சிக்கப்படவேண்டும். நீங்கள், “இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரன் என்றும், அவர் என்னுடைய பாவங்களுக்காக மரித்து மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தார் என்றும் விசுவாசிக்கிறேன். என் மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு,என் அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். எனக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறேன்” என்று கூறுகின்றீர்கள். அவ்வாறு நீங்கள் உண்மையாக அறிக்கையிடும்போது...உங்கள் பாவங்கள், உங்கள் அக்கிரமங்கள், உங்கள் திறமை, உங்கள் எல்லாமே பலிபீடத்தின் மேல் வைக்கப்படுகின்றன. உங்கள் கரங்களில் ஒன்றுமேயில்லை. சாத்தான் தன்னாலான மட்டும் ஒவ்வொரு அம்பையும் உங்கள் மேல் எய்கிறான், அப்பொழுது நீங்கள்,“ஒருக்கால் நான் இரட்சிக்கப்படவில்லை, ஒருக்கால் நான் சுகமடையவில்லை'' என்று சந்தேகப்பட்டு அதனின்று வழிவிலகிப்போனால், ''நீங்கள் தேவனுடைய புத்திரர் அல்ல, வேசிப்பிள்ளைகள்” என்று வேதம் கூறுகின்றது. 28தேவன் ஆபிரகாமைச் சோதித்தது போலவே ஒவ்வொரு ஆபிரகாமின் பிள்ளையையும் சோதிக்கிறார். ஏனெனில் நாம் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம் கிறிஸ்துவுக்குள் நாம் மரித்ததன் மூலம், நாம் ஆபிரகாமின் சந்ததியாரும், வாக்குத்தத்தத்துக்கு சுதந்தரவாளிகளாகவும் இருக்கிறோம். ஆபிரகாமின் சந்ததியார்; அந்த ஆவியைத்தான் ஆபிரகாம் பெற்றிருந்தான். அவனுக்கு வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டிருந்தது. நமது தகப்பனாகிய ஆபிரகாம் தேவனை விசுவாசித்து, அவரளித்த வாக்குத்தத்தத்தை கூடாத காரியத்தை ஏற்றுக்கொண்டு அது நிறைவேறுவதற்கு முன்பு இருபத்தைந்து ஆண்டுகளாக அதை இறுகப்பற்றிக்கொண்டு, நாளுக்கு நாள் பெலனடைந்து வந்தான் என்றால், அவனுடைய சந்ததியும் அவனைப் போலவே இருக்கும். என்ன நேர்ந்த போதிலும், அதற்காக நமக்கு ஜெபம் ஏறெடுக்கப்பட்டு விட்டால், அத்துடன் அது முடிவு பெற்றுவிட்டது. எல்லாவற்றையும் நாம் வழியிலிருந்து அகற்றி, தேவனுடைய அவசியங்கள் அனைத்தையும் சந்தித்து, பின்பு தேவனைக் கேட்போமானால், அதை நாம் பெற்றுக் கொள்வோமென்னும் உறுதியுடன் நிற்கலாம். 29தேவன் யோபுவை அவ்வாறு சோதித்தார், யோபு இரக்கத்திற்காக கெஞ்சி, தன் பிள்ளைகளுக்காக பலி செலுத்தினான். அந்த தீர்க்கதரிசிக்கு தகனபலி மாத்திரமே அப்பொழுது இருந்தது. அதுதான் தேவனுக்குத் தேவையாயிருந்தது. தேவனுக்கு கல்வியும், அர்த்தமற்ற அநேக காரியங்களும் தேவையில்லை. அவருடைய சித்தத்துக்கு அர்ப்பணிக்கும் இருதயமே அவருக்குத் தேவை. ஒரு பிரத்தியேக முறையில் நீங்கள் உடை உடுக்க வேண்டுமென்றோ அல்லது ஒரு குறிப்பிட்ட கல்லூரிக்குச் சென்று பட்டங்களைப் பெற வேண்டுமென்றோ அவர் உங்களைக் கேட்கவில்லை. அவர் தாழ்மையுள்ள, நொறுங்குண்ட, நறுங்குண்ட ஆவியையும், அவரை ஏற்றுக்கொள்ள சித்தமாயுள்ள இருதயத்தையும் மாத்திரமே கேட்கிறார். யோபுக்கு எப்படிப்பட்ட பாதிப்பு இருக்கும் என்பதைக் கண்டுக்கொள்ள அவர் அவனைச் சோதித்தார். அவர் அவனுடைய ஆடுகளையும், மாடுகளையும்,ஒட்டகங்களையும், பிள்ளைகளையும் எடுத்துக்கொண்டு,“யோபு என்ன சொல்லுகிறான் பார்ப்போம்'', என்றார். அவன் “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்.'' கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” என்றான். யோபுக்குள் என்ன இருக்கிறது என்று அவர் சாத்தானுக்கு அறிவித்ததை அவனில் கண்டார் ''அவனைப்போலப் பூமியில் ஒருவனும் இல்லை“. அப்பொழுது இடிகள் முழுங்கத் தொடங்கின. மின்னல் அடிக்கத் தொடங்கினது. ஆவியானவர் தீர்க்கதரிசியின் மேல் வந்தார். அவன், ''என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும் அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக் கிறேன். இந்த தோல் புழுக்கள் இந்த சரீரத்தை அழித்தாலும் (ஆங்கில வேதத்தில் உள்ளபடியே - தமிழாக்கியோன்) நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்“என்றான். 30எபிரெய பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட பாதிப்பு இருக்கும் என்பதைக் காண அவர் அவர்களைச் சோதித்தார். அவர்கள் அஞ்ஞானிகளின் மத்தியில், ''ஜீவனுள்ள தேவன் ஒருவர் இருக்கிறார், அவர் யேகோவா தேவன். அவர் வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறார். எல்லா ஆத்துமாக்களையும் அவர் தமது கரங்களில் கொண்டிருக்கிறார்'',என்று அறிக்கையிட்டனர். எனவே அவர்கள் எல்லா அவசியங்களையும் சந்தித்திருந்தனர். அவர்கள் ஜெபம் செய்து எல்லாவற்றையும் வழியிலிருந்து அகற்றியிருந்தனர். ராஜாவின் சொரூபத்துக்கு முன்பாக அவர்கள் பணிய மறுத்தனர். அவன் சூளையை ஏழு மடங்கு சூடாக்கினான் முன்பைக் காட்டிலும் அதிக சூடு,சாத்தான் அவர்களிடம்,“இது தான் உங்கள் வாழ்க்கை பாதையின் முடிவு” என்று கூற முயன்றான் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் பதிலளித்த விதம் எனக்கு மிகவும் பிரியம்.“நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களை இந்த அக்கினி சூளையினின்று தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் தப்பு விக்காமற்போனாலும், நாங்கள் தேவனுடைய கற்பனைகளை மீற மாட்டோம். அதற்கு உண்மையாக இருப்போம்! நாங்கள் தேவனுடைய வார்த்தைக்கு உண்மையாயிருந்தோம் என்பதை வரப்போகும் ஆண்டுகளில் எங்கள் விசுவாசம் பறைசாற்றி அறிவிக்கட்டும்”, என்றனர். 31“என் தேவன் என்னை இவ்வியாதியினின்று சுகமாக்க வல்லவராயிருக்கிறார்.” “என் தேவன் இந்த சக்கரநாற்காலியிலிருந்து என்னை எழுந்து நடக்கச் செய்ய வல்லவராயிருக்கிறார். அவரை என் சுகமளிப்பவராக ஏற்றுக்கொண்டேன். என் பாவங்களை (அவிசுவாசத்தை) நான் அறிக்கையிட்டேன். அவரே எனக்கு சுகமளிப்பவர் என்று விசுவாசிக்கிறேன் என்று நான் அறிக்கை செய்து விட்டேன். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். இன்று நான் சுகம் பெறாவிட்டால், நாளை நான் சுகம் பெறுவேன். நாளை இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு. கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்.” 32பார்த்தீர்களா?அவர்கள் சோதனைக்குட் பட்டவர்களாய் அக்கினிசூளைக்குள் நடந்து சென்றனர். அவர்கள் கடைசி மட்டும் உண்மையாய் இருந்தனர். ஆனால் ஒரு நொடியில் தேவன் அங்கு வந்து அவர்களை விடுவித்தார். அவர்களுக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்டது என்று அவர்கள் அறிந்திருந்தனர். அவர்களுடைய பாவங்கள் அறிக்கை செய்யப்பட்டிருந்தன. தேவனுடைய அவசியங்கள் அனைத்தையும் அவர்கள் சந்தித்திருந்தனர் என்று அவர்கள் அறிந்திருந்தனர்,ஆயினும் அவர் மெளனமாயிருந்தது போல் காணப்பட்டார். உங்களை சோதிப்பதற்காகவே அவர் மெளன மாயிருக்கிறார் - நீங்கள் உண்மையாகவே யாரென்பதைக்காணவும், உங்களுக்குள் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவும், நீங்கள் உதடுகளினால் என்ன கூறுகிறீர்களோ,அது உண்மையாகவே உங்கள் இருதயத்திலிருந்து எழுகிறதா என்பதை அறிந்து கொள்ளவுமே இது உங்களில் ஆழமாக பதியட்டும். நம் உதடுகளினால் நாம் எதையும் கூறி விடலாம். ஆனால் நமது இருதயம் அதைக் கூறுகின்றதா? 33இந்த ஸ்திரீ தேவனுடைய அவசியங்கள் அனைத்தும் சந்தித்திருந்ததை அறிந்திருந்தாள். ஆயினும் தேவன் மௌனமாயிருந்தார். அவளுக்காக அவர் கவலை கொள்ளாதது போல் தோன்றினது. அவள் உயிர் வாழ்ந்தாலும் மரித்துப்போனாலும் அவருக்குக் கவலையில்லை என்பது போல் தோன்றினது. ஆனால் தேவனோ தொடக்கத்திலிருந்து கிரியை செய்து கொண்டு வந்தார். அவளுக்கு அது தெரியவில்லை. ஆனால் கர்த்தர் எலியாவிடம் கூறினார்.அவர் ஆற்றின் தண்ணீரை வற்றச் செய்தார். அவர் தமது கரங்களை நீட்டி ஆற்றில் தண்ணீர் ஓடுவதை நிறுத்தினார்.எலியா, ''ஆண்டவரே, ஆற்றில் தண்ணீர் ஏன் நின்று விட்டது?“ என்று கேட்டான். அவர்,''உன்னைப் போஷிக்கும்படி நான் ஒரு விதவைக்கு கட்டளையிட்டிருக்கிறேன்'' என்றார். அவர் ஏற்கனவே அவளுக்கு கட்டளையிட்டு விட்டார். அவளோ அதை அறியவில்லை. 34அவர் ஏற்கனவே நீ சுகமான சாட்சியைக் கட்டளையிட்டிருக்கலாம், அதை நீ அறியாமலிருக்கலாம். ஆனால் அதை நீ இறுகப்பற்றிக் கொண்டிரு. நீ தேவனுடைய அவசியங்கள் அனைத்தும் சந்தித்து விட்டாய் என்னும் உறுதியைப் பெற்றிருந்தால், உனக்கு செய்யத் தெரிந்த அனைத்தும் நீ செய்து விட்டாய் என்றும், நீ தேவனுடைய சமுகத்தில் உன்னை கிடத்திவிட்டாய் என்றும் அறிந்திருப்பாயானால், நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று. அவருடைய வாக்குத்தத்தத்தை இறுகப் பற்றிக்கொள். அதிலே நிலைகொள் தேவன் பதிலளிப்பதாக வாக்களித்துள்ளார், அவர் நிச்சயம் செய்வார். அவர் என்ன கட்டளையிட்டிருக்கிறார் என்று உனக்கு தெரியாதே எந்த தேவதூதனிடமோ அல்லது என்ன செய்ய வேண்டுமென்றெ, ஒருக்கால், நாளை இரவு சுகமளிக்கும் ஆராதனை தொடங்கும் முன்பு, அது இன்றிரவே நிகழலாம். தேவன் உன் நிலையை இன்றே கண்டிருக்கலாம். உன் ஜெபத்தை அவர் கேட்டிருக்கலாம். 35செவிடும் ஊமையுமான இந்த ஜனங்களுக்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவர்கள் மேல் கைகளை வைத்து ஜெபம் செய்ய விரும்பி, கடந்த இரவு அங்கு செல்ல எண்ணி னேன். ஆனால் மற்றவர்களுக்கு அது சரியாகத் தென்படாது. ஆனால் எனக்கு எப்படித் தெரியும்? ஒருக்கால் இருதயத்தை அறிந்துள்ள மெளனமான தேவன், அவர்கள் தேவனுடைய அவசியங்களை சந்தித்து ஆயத்தமாயுள்ளார்கள் என்பதை அறிந்திருக்கலாம். இன்றிரவு அவர்களை இவ்வுபத்திரவத்தினின்று விடுவிக்க ஒரு தேவதூதன் இங்கிருக்கலாம். வியாதியஸ்தருக்காக ஜெபம் செய்தாலும் செய்யாமல் போனாலும், அவர்கள் அதைப் பெற்றுக்கொள்வார்கள். ஏனெனில் தேவனுக்கு அது அவசியமாயுள்ளது. தேவனைக் குறித்து நிச்சயமுடையவர்களாயிருந்து, அதில் நிலைத் திருந்து, அவருடைய அவசியங்களைச் சந்தியுங்கள். சரியானவைகளை எப்படி செய்வதென்று தேவனுக்குத் தெரியும். அதை சரியான விதத்தில் எப்படி செய்வதென்று அவருக்குத் தெரியும். 36ஒரு விதவைப் பெண்ணின் வீட்டிற்கு தேவன் தமது தீர்க்கதரிசியை அனுப்புவதென்பது ஒரு வினோதமான செயல். அனுப்புவதற்கு அது என்ன ஒரு இடம்! அவள் உண்மையாகவே ஒரு நற்பண்புள்ள ஸ்திரீயாக இருந்திருக்க வேண்டும், இல்லையேல் அவர் தமது தீர்க்கதரிசியை அங்கு அனுப்பியிருக்கமாட்டார். எலியாவைப் போன்ற ஒருவனை உபசரிக்க அவள் தகுதியுள்ளவளாக இருந்திருக்க வேண்டும். உங்களுக்கு ஞபாகமிருக்கிறதா? சகரியா தன் வீட்டார் அனைவரிலும் மிக உத்தமும் உண்மையுள்ளவனாயிருந்து, தேவன் தனக்கு ஒரு பிள்ளையைத் தரக் காத்துக்கொண்டிந்தான். காபிரியேல் தூதன் அவன் வீட்டிற்கு வந்தான். கன்னி மரியாளும் கற்புள்ளவளாகவும் சுத்தமாகவும் வாழ்ந்து தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்துக் கொண்டிருந்தாள். அவளிடமும் ஒரு தூதன் அனுப்பப்பட்டான். 37உலகத்துடன் இணங்கி ஓடி நடந்து, அதனுடன் சல்லாபம் செய்து, பின்பு தேவதூதர்களைக் காணவும், அற்புதங்கள் நடக்கவும் எதிர்பார்ப்பது எப்படி?அது தேவனுடைய திட்டத்துக்கு அப்பாற்பட்டது. நீங்கள் சரியாக நடக்கவேண்டும், உங்கள் வீட்டை சுத்தப் படுத்துங்கள், உங்கள் பழக்க வழக்கங்களை சுத்தப்படுத்துங்கள். உலகத்தின் காரியங்களை அகற்றி உங்களை சுத்தப்படுத்துங்கள், உங்கள் சீட்டுக் கச்சேரியையும் உலகத்துடன் நீங்கள் கொண்டுள்ள தொடர்பையும் ஒழித்துவிட்டு, ஆயத்தப்படுங்கள். அப்பொழுது தேவதூதன் உங்களிடம் பேசி,''நான் தான், பயப்படாதிருங்கள்!'' என்பான். அப்பொழுது காரியங்கள் நிகழும். 38அந்த ஸ்திரீ முழங்காற்படியிட்டு ஜெபம் செய்து கொண்டிருந்தாள். தீர்க்கதரிசி மலையிலிருந்து இறங்கி அவனிடம் வருகிறான் என்பதை அவள் அறியாதவளாயிருந்தாள். தான் எங்கு போக வேண்டும் என்பதைக் குறித்த தரிசனம் அவனுக்கு உண்டாயிருந்தது. தேவன் தமது ஜனங்களை குருட்டுத்தனமாக வழிநடத்துவதில்லை. அவர்கள் எங்கு போகவேண்டும் என்பதை தெளிவாகக் காண்பிக்கிறார். அவன் பட்டினத்தை நோக்கிப் பார்த்த போது, அது மிகவும் பயங்கரமான நிலையில் இருந்தது. ஜனங்கள் பட்டினியினால் மரித்துக் கொண்டிருந்தனர். தண்ணீருக்காக கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர், பசியால் வாடித்தவித்தனர். அது கெட்ட நடத்தையின் விளைவால் உண்டானது, அது பாவத்தின் பிரதிபலிப்பாகும். இந்த தேசமும் அப்படிப்பட்ட நிலையை அடைய போகிறது. இயற்கையின் விதிகளும் கூட இதை சும்மா விட்டுவைக்காது. உலகின் ஜனத்தொகையில் பாதிபேர் பட்டினியினால் மரித்துக் கொண்டிருக்கும் போது (கிறிஸ்து அந்த மானிடருக்காகவும் மரித்தாரே!), நாம் நமது கட்டுக்கடங்காத வாழ்க்கையினால் பணத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். 39அதன் காரணமாகத் தான் வெளிநாட்டு சுவிசேஷ ஊழியம் என் இருதயத்தில் பதிந்துள்ளது. பீனிக்ஸில் மிகவும் அருமை யான போதகர்கள் உள்ளனர். அமெரிக்க ஐக்கிய நாடுகள் முழுவதிலும் ஒவ்வொரு மூலையிலும் ஆலயங்கள் உள்ளன. ஓரல் ராபர்ட்ஸ் போன்ற மகத்தான மனிதர்களும் இன்னும் அநேகரும் பிரசங்கம் செய்கின்றனர். ஆனால் உலகின் மற்ற பாகங்களில் இயேசுவின் நாமத்தை ஒரு முறை கூட கேள்விப்படாதவர் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மரித்துக் கொண்டிருக்கின்றனர். ஆப்பிரிக்காவில் ஏழை, எளிய, நீக்கரோக்களும், அது போன்று இந்தியாவில் தெருக்களில் படுத்துக் கொண்டிருப்பவர்களும், 'தேவன்' என்னும் சொல்லுக்கு அர்த்தமே அறியாதவர்களாய் மரித்துக் கொண்டிருக்கின்றனர். சூழ்நிலை அவ்வாறிருக்க, நம்மிடையே காணப்படும் சிறு மார்க்க போதகங்களின் பேரில் நாம் தர்க்கித்துக் கொண்டிருக்கிறோம். நண்பர்களே, அது சரியல்ல என்று நான் நினைக்கிறேன் அதை புரிந்துத்கொள்ள உங்கள் உள்ளத்தில் நீங்கள் தீர்மானம் கொண்டால். 40இந்த ஏழை ஸ்திரீயை கவனியுங்கள். அவள் ஜன்னலின் வழியாகப் பார்த்து காலை விடியப் போகிறது என்று அறிந்த போதிலும், அவளுக்காக என்ன காத்துக் கொண்டிருக்கிறது என்பதை சிறிதேனும் அறியாதவளாய் இருந்தாள். அவளுக்கும் அவள் சிறிய மகனுக்கும் மரணம் நேரிடும் என்று அவள் எண்ணியிருந்தாள்.அவள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, அவளை சில நிமிடங்கள் உற்று நோக்குவோம். அவள் ஜெபம்பண்ணி முடித்த பின்பு, மகனிடம் சென்று, அவன் கண்களின் மேல் விழுந்திருந்த தலைமயிரை பின்னால் ஒதுக்கி, “அன்பான சிறுவனே, காண்பதற்கு நீ பரிசுத்தவானாகிய உன் அருமை தந்தையைப் போலவே இருக்கிறாய். அவர் எவ்வளவாக தேவனை விசுவாசித்தார்! இஸ்ரவேல் தேசத்திற்காக போர்க்களத்தில் தன் உயிரையே கொடுத்தாரே!அவரைப் போலவே நீ இருக்கிறாய். குற்றமுள்ளவர்களுடன் குற்றமற்றவர்களும் ஏன் கஷ்டப்படுகின்றனர் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் கஷ்டப்படுகின்றனர்', என்று கூறியிருப்பாள். கிறிஸ்தவர்களே, இந்த தேசமும் அரசியலில் காணப்படும் அநீதியின் காரணமாக கஷ்டப்படும். அது முழு தேசத்தையும் கஷ்டத்துக்குள்ளாக்கும். 41அவள் அங்கு சென்று,“ஒரு சிறு அப்பத்தை சுட்டுத் தருகிறேன். ஒரு சிறு அப்பத்துக்கு மாத்திரமே போதிய மாவு உள்ளது. அதை நாம் சாப்பிட்டு மரித்துவிடலாம்'' என்று கூறுவதை என்னால் காணமுடிகிறது. எனவே அவள் அறைக்குள் சென்று பானையிலுள்ள மாவை எடுக்கிறாள். எலும்புகள் காணும் தன் கரத்தினால் அவள் தூசை தட்டிவிட்டு, கரண்டியினால் பானையைச் சுரண்டுவதை என்னால் காணமுடிகிறது. முடிவில் ஒரு அப்பத்துக்கு போதிய மாவு அவளுக்குக் கிடைக்கிறது. அவள் கலசத்தை எடுத்து அதிலிருந்த எண்ணெயை ஊற்றுகிறாள். ஒரு கரண்டியளவு மாத்திரமே இருந்தது. 42இந்த மாவு (meal) - இவையனைத்திற்கும் ஒரு அர்த்தமுண்டு. மாவு கிறிஸ்துவைக் குறிக்கிறது. கிறிஸ்துவே போஜன-பலி. அசைவாட்டும் காணிக்கைக்காக அவர்கள் பழைய ஏற்பாட்டில் மாவை அரைத்தபோது அது அசைவாட்டும்- காணிக்கையில் கிறிஸ்து- ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மெல்லியமாவாக அரைத்தனர். மாவின் துண்டுகள் ஒரே அளவாக பிட்கப்படவேண்டும். ஏனெனில் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 43உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அங்கிருந்த சிலர் பேய்க் கொம்மட்டி காய்களுக்கும் பட்டாணிக்கும் வித்தியாசம் தெரியாமல்,பேய்க் கொம்மட்டி காய்களை பட்டாணி உள்ள பானையில் போட்டு சமைத்தார்கள், அவர்கள், ''பானையில் சாவு இருக்கிறது“? என்று சத்தமிட்டனர். அப்பொழுது எலியா ஒரு பிடி மாவை பானையில் போட்டு, ''இப்பொழுது சாப்பிடுங்கள்“ என்றான். அந்த மாவு என்ன செய்தது? அது பானையிலிருந்த மரணத்தை ஜீவனாக மாற்றினது - மரணத்தைப் பிறப்பிக்கும் ஒன்றிலிருந்து ஜீவனைப் பிறப்பிக்கும் ஒன்றாக. இன்றிரவும் அவ்வாறேயுள்ளது. உங்கள் சரீரமாகிய பாண்டத்தில் மரணம் இருந்தபோது, கிறிஸ்து தம்மை உங்கள் பாண்டத்துக்குள் போட்டு, உங்களை மரணத்திலிருந்து ஜீவனுக்குள் இரட்சிக்கிறார். கிறிஸ்துவே வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறார். அவர் மனித இருதயத்துக்குள் வந்து, ஓ, எல்லா புத்திக்கும் மேலான சமாதானத்தை அருளுகிறார். அது நமக்கு நித்திய ஜீவனையும் அளிக்கிறது. ''குமாரனை விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான். அவன் ஒருக்காலும் அழிந்துபோவதில்லை.“ 44அந்த ஸ்திரீ மாவை எடுத்தாள். அது கிறிஸ்துவுக்கு அடையாளமாயுள்ளது. கிறிஸ்து வார்த்தை. “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே (நம்மிடையே) வாசம் பண்ணினார். ”போஜன பலியாகிய கிறிஸ்து. அவள் போய் எண்ணெயைக் கொண்டு வந்தாள். எண்ணெய் ஆவிக்கு அடையாளமாயுள்ளது, அவள் வார்த்தையையும் ஆவியையும் ஒன்று சேர்த்து அதை கலக்கினாள் (பிசைந்தாள்). ஓ, அப்படி செய்யும் போது ஏதாவதொன்று நிகழ வேண்டும், இன்றிரவு நான் பிரசங்கிக்கும் வார்த்தை உங்கள் இருதயங்களில் விழுவதாக! பின்பு பரிசுத்த ஆவி அங்கு வந்து அதனுடன் கலக்கிறது. நீங்கள் வார்த்தையையும் ஆவியையும் ஒன்று சேர்க்கும் போது என்ன நேரிடுகிறதென்று கவனியுங்கள்! கிணற்றடியிலிருந்த ஸ்திரீயிடம் இயேசு, ''ஸ்திரீயே, நான் உனக்கு சொல்லுகிறேன். தேவனை ஆவிக்குள்ளாகவும் சத்தியத்திற்குள்ளாகவும்(Truth) தொழுதுகொள்ள வேண்டிய நேரம் வரப்போகிறது. அது இப்பொழுதே வந்திருக்கிறது'' என்றார். அவரே சத்தியம்(Truth). 45அந்த மாவை அவள் என்ன செய்தாள் என்று கவனியுங்கள்! அவள் வார்த்தையையும் ஆவியையும் ஒன்றாகப் பிசைந்தாள். அநேகருக்கு வார்த்தை இல்லாமல் ஆவி இருக்கிறது, சிலருக்கு ஆவி இல்லாமல் வார்த்தை இருக்கிறது. ஆனால் நீங்கள் இவ்விரண்டையும் எடுத்து சரியான இடத்தில் பொருத்தும்போது அப்பம் கிடைக்கின்றது, ஏதோ ஒன்று உண்டாகத் தொடங்குகின்றது. 46இந்த ஏழை விதவைக்கு, தான் என்ன செய்கிறாள் என்று தெரியவில்லை. ஆனால் கர்த்தர் எலியாவிடம், '' நான் அவளுக்குக் கட்டளை யிட்டேன்“, என்றார். எலியாவும் கற்களின் மேல் நடந்து பாதையில் சென்று கொண்டிருக்கிறான். அவனுடைய தரிசனம் எங்காவது நிறைவேறும் என்று அறிந்தவனாய் மலையிலிருந்து இறங்கி வருகிறான். அப்பொழுது அந்த ஸ்திரீ அங்கு நின்று கொண்டிருக்கிறாள். அவள் கிழிந்து பழையதாய்போன தன் ஆடையினால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு,“ஓ, யேகோவா தேவனே, என் விசுவாசம் தவறினதேயில்லை, அது இப்பொழுதும் தவறாது. இதெல்லாம் ஏன் நடக்கிறதென்று தெரியவில்லை.ஆனால் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்று நாங்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்”என்றாள். அவள் மாவைப் பிசைந்து ஆயத்தம் செய்தாள். அவள், ''நான் விறகு பொறுக்கி வருகிறேன்“என்று சொல்லி, சென்று கதவைத் திறக்கிறாள். அவள், ”ஓ, ஆண்டவரே, அந்த சிறுவனின் வயிறு பசியால் வாடி, அவன் அங்கு படுத்துக்கொண்டிருக்கிறானே, நானும் இரண்டு மூன்று வாரங்களாக சாப்பிடவில்லை. என் அப்பத்துண்டை அவனுக்கு கொடுத்து வருகிறேன்“, என்றாள். அதுதான் தாய் தன் குழந்தைக்காக கொண்டுள்ள பாசம். அதற்கு ஈடு வேறெதுவுமே இல்லை தேவனுடைய அன்பைத் தவிர, ''தாய் தன் பாலகனை மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்'', அவர் எப்படி உன்னை மறக்க முடியும்? ''நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை,உன்னைக் கைவிடுவதுமில்லை, இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உன்னோடு கூட இருப்பேன்.“ 47அவள் தன் மகனை உற்று நோக்கினாள். ஒருக்கால் அவள் மீண்டும் சென்று அவன் நெற்றியை முத்தமிட்டிருப்பாள். அவள் வழியில் மயக்கமுற்று விழுந்து மரித்துப்போனால் அவள் வெளியே செல்கிறாள். அப்பொழுது சூரியன் யூதேயா மலைகளுக்கு மேல் எழும்பி வருகிறது. சூரியன் மலைகளிலிருந்து எட்டிப் பார்ப்பதை அவள் காண்கிறாள். தெருக்களில் கூக்குரலை அவள் கேட்கிறாள். அவள் முற்றத்தில் சென்று இரண்டே விறகு சுள்ளிகளைப் பொறுக்குகிறாள் கை நிறைய அல்ல- இரண்டே விறகு சுள்ளிகள். அது என்ன? அது சிலுவை (Cross). 48என் நண்பர்கள் என் இந்திய நண்பர்கள் அல்லது வேட்டைக்காரர் எவரும், சரியான விதத்தில் தீ மூட்டுவது எப்படி என்பதை அறிவார்கள், அதாவது, இரண்டு விறகு சுள்ளிகளை அல்லது விறகு கட்டைகளை குறுக்கே (Cross) வைத்து, அதன் நடுவில் தீ மூட்டி, அதன் முனைகளை தள்ளிக் கொண்டேயிருக்க வேண்டும். அப்பொழுது இரவு முழுவதும் அது எரிந்து கொண்டிருக்கும். அநேக சமயங்களில் நான் காட்டில் இரண்டு சிறு விறகு சுள்ளிகளுக்கு தீ மூட்டி, இரவு முழுவதும் குளிர்காய்ந்திருக்கிறேன். அதன் நடுவில் தீ மூட்டிய பிறகு, அது என்னைப் போதிய அளவுக்கு வெப்பமாக வைத்துள்ளது 49அவள் என்ன செய்யப்போகிறாள்? இந்த இரண்டு சுள்ளிகளுக்கும் தீ மூட்டப்போகிறாள். வார்த்தையும் ஆவியும் சிலுவையில் சுயதியாகத்தைக் கொண்டு வந்து பணியைச் செய்ய ஜீவனைக் கொடுக்க ஆயத்தமாயுள்ளன. வார்த்தையும் ஆவியும் ஒன்றாகக் கலந்து அதுவே பரிசுத்த ஆவியினால் தேவனுடைய வார்த்தையின் மேல் அவளுக்கிருந்த விசுவாசம் எதை வேண்டுமானாலும் தியாகம் செய்து அவளை சிலுவையண்டையில் வழி நடத்துகிறது... அவள் அக்களத்தில் இரண்டு சுள்ளிகளை வைத்துக் கொண்டு திரும்பி வந்தபோது,கதவண்டை ஒரு குரல், 'அம்மா ' என்றது. கதவண்டை ஒரு வயோதிப, ஒருக்கால் வழுக்கை தலையுடைய ஒருவன் நின்று கொண்டிருந்தான்.அவனுடையதாடி. 'நரைத்திருந்தது. அவன் கையில் ஒரு தடியை வைத்திருந்தான். அவன் பழைய ஆட்டுத்தோல் ஒன்றைப் போர்த்துக் கொண்டிருந்தான், அவன் தெருவில் நடந்து வந்து கொண்டிருக்கும்போது,'ஆண்டவரே, ஒரு சிறு வெள்ளை வேலி இருக்கும். அங்கு அழகான ஒரு வாலிபப் பெண் இருப்பாள்'' (அவள் வாலிபமாக இருந்திருக்க வேண்டும், ஏனெனில் அவளுடைய மகன் சிறுவன்)' அவள் முற்றத்தில் இருப்பாள். அந்த விதவை பெண்தான் எனக்கு ஆகாரம் கொடுப்பாள் என்று கூறினீரே. அவள் எங்கேயிருக்கிறாள்? நான் நடந்து கொண்டேயிருப்பேன்“ என்று கூறினான். ஆவியானவர் அவனை அந்த வழியாக நடத்தி, அவனைத் திரும்பச் சொல்கிறார். ஓ, அது மிகவும் அற்புதமானது! தேவனுடைய புத்திரர் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகின்றனர். அது எவ்வளவு மூடத்தனமாக தென்பட்டாலும், அவர்கள் நடத்தப்படுகின்றனர். அவன் ஒரு தெருவைக் கடந்து மற்றொரு தெருவுக்குள் நுழைகிறான்- இப்படியாக ஒரு தெருவிலிருந்து மற்றொரு தெருவுக்கு. சற்று கழிந்து ஆவியானவர், “உன் வலது பக்கம் பார்''என்றார், அவன் இப்படி திரும்பிப் பார்க்கிறான் ஒவ்வொரு இரவும் அவர் இந்த மேடையின் மேல் செய்வது போல். ஓ, தேவன் இன்றும் மாறாத தேவனாயிருக்கிறார்.'' உன் வலது பக்கம் பார், உன் இடது பக்கம் பார். ஒருவர் ஜெபம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்குத் தேவையுள்ளது'', என்று அவர் இப்பொழுது சொல்வது போல். 50அவன் வலது பக்கம் திரும்பி பார்த்தான்.“அதோ வெள்ளை வேலி இருக்கிறதே, அது உண்மை. நான் இங்கிருந்து நகர மாட்டேன். ஏனெனில் அந்த மரம் அங்குள்ளது. நான் தரிசனத்தில் கண்ட விதமாகவே எல்லாம் அமைந்துள்ளது”, என்று நினைத்தான், கதவுதிறந்தது. மெலிந்த ஒரு ஸ்திரீ வெளியே வருகிறாள். அவள் இரண்டு சுள்ளிகளை மாத்திரமே பொறுக்க வெளியே சென்றாள். அவள் மூன்று சுள்ளிகளை பொறுக்கியிருக்க முடியாது. குறுக்கே (Cross) வைக்க இரண்டு சுள்ளிகள் மாத்திரமே தேவை. அவள் இரண்டு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு, அக்களத்தில் வைத்து வீடு திரும்பும்போது, “மகன் உறக்கத்தினின்று எழும் முன்பு இந்த அப்பத்தை சுட்டு விடுவேன். அவனுக்கு அதை ஊட்டி விடுவேன். நான் ஒன்றும் சாப்பிடமாட்டேன். மகனை என் கரங்களில் அணைத்து உட்கார்ந்து கொண்டே நாங்கள் மரித்துப் போவோம்” என்று நினைத்தாள். அவள் வீட்டிற்குள் நுழைந்தாள். 51அப்பொழுது ஒரு அந்நியனின் குரல் வாசலில் கேட்டது, ''ஸ்திரீயே, குடிக்கிறதற்கு கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் கொண்டு தருவாயா?“ அவள் திரும்பிப்பார்த்தாள்.“பட்சமுள்ள ஒரு வயோதிபன் அங்கு நின்று கொண்டிருக்கிறார்”,என்று நினைத்தாள். அவள் அவனை உற்று கவனித்தாள். ஒருக்கால் அவள் தன் கண்ணீரை அப்பொழுது துடைத்திருக்கலாம். அது விடியற்காலமாக இருந்தது. தேவன் காரியங்களை விசித்திரமாகச் செய்வார் என்று உங்களுக்குத் தெரியும். அவள் தியாகம் செய்ய சித்தமாயிருந்தாள். தண்ணீர் மிகவும் குறைவாக இருந்தது. ஏனெனில் மூன்றரை ஆண்டு காலமாக மழை பெய்யவில்லை. ''தண்ணீர் கொண்டு தருவாயா?“ அவள் என்ன செய்கிறாள், அது அவளில் எத்தகைய பாதிப்பை விளைவிக்கிறது என்று கவனிக்க அப்படி கேட்கும்படி ஒருக்கால் தேவன் அவனிடம் கூறியிருப்பார். ”குடிக்கிறதற்கு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு தருவாயா?“ அவள் அவனைப் பார்த்தாள். ''இவர் வித்தியாசமாகத் தெரிகிறார். இந்த வயோதிபனைக் கண்டால் எனக்கு பரிதாபமாயுள்ளது.“ 52தேவனை விசுவாசிக்கும் எந்த விசுவாசியும் தன்னுடையதை வேறொரு விசுவாசியுடன் கடைசி மட்டும் பகிர்ந்து கொள்வான். அது பெந்தெகொஸ்தே யினரிடையே காணப்படும் ஒரு சிறந்த செயல். அவர்கள், அந்த நோக்கத்திற்காக, தங்கள் 'ஷர்ட்டு' களையும் கூட கழற்றி கொடுத்து விடுவார்கள்.அது உண்மை. அது மிகவும் பெரிய காரியம்-அவர்களில் காணப்படும் பெரிய காரியங்களில் இது ஒன்று. கொடுக்கும் விஷயத்தில் அவர்கள் உலகில் தலை சிறந்தவர்கள். இவ்வுலகப் பொருட்கள் ஒன்று மில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் பொக்கிஷங்களை பரலோகத்தில் சேர்க்கின்றனர், ஏனெனில் என்றாகிலும் ஒருநாள் அவர்கள் அங்கு செல்லவிருக்கின்றனர். 53இந்த ஸ்திரீ, “என் தண்ணீரை அவருடன் பகிர்ந்து கொள்வேன், எப்படியாயினும் நாங்கள் மரிக்கப் போகிறோம். ஆகையால் குடிக்கும் தண்ணீரை தியாகம் செய்து, அங்கு நின்று கொண்டிருக்கும் பட்சமுள்ள அந்த வயோதிபருடன் பகிர்ந்து கொள்வேன். அவர் தாகமுடனும் களைப்புடனும் காணப்படுகிறார்'', என்று நினைத்து, ”இதோ கொண்டு வருகிறேன்'' என்று சொல்லி உள்ளே புறப்பட்டாள். அப்பொழுது மறுபடியும் அவள் அந்த குரலைக் கேட்டாள்: ''மற்றொரு கையில் ஒரு சிறு அப்பம் கொண்டு தருவாயா?“ ஓ, என்னே! இப்பொழுது, இப்பொழுது என்ன? அவளுடைய மகனின் ஜீவனின் கடைசி நம்பிக்கை அது. அவர்களுக்கிருந்த கடைசி நம்பிக்கை அதுவே, அப்படியானால் மாவு செலவழிந்து விடும், எண்ணெய் தீர்ந்து விடும், எல்லாமே போய்விடும். அவள்...திரும்பிப்பார்த்தாள், ஆச்சரியமுற்றாள்; அவள் ''பானையில் சிறிது போஜனம் மாத்திரம் உள்ளது. அந்த மாவை இருந்த எண்ணையில் மாவைக்கலந்து ஈரப்படுத்தி அதை ஏற்கெனவே தயார் செய்து விட்டேன் அல்லது கலந்துவிட்டேன். (நான் வார்த்தையையும் ஆவியையும் ஒன்று கலந்து விட்டேன்.அதை மேலே வைத்து அப்பம் சுட்டு, எனக்கு ஜீவன் அளிக்க, சிலுவை என்னிடம் உள்ளது“) வார்த்தையும் ஆவியும் ஒன்றாக கலக்கப்பட்டு சிலுவையின் மேல் வைக்கப்படும்போது, அது ஜீவ அப்பத்தை உங்களுக்கு அளிக்கிறது. அது உண்மை. ''அதை நான் ஒன்றாக கலந்துவிட்டேன். அதை சுட்டு, சாகும் தருவாயிலுள்ள என் சிறு பையனுக்குக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். சாப்பிட ஏதாகிலும் வேண்டுமென்று அவன் இரவு முழுவதும் அழுதிருக்கிறான். அவனுக்கு நான் கொடுக்க வேண்டும். என்னுடையதையும் நான் தியாகம் செய்து அவனுக்குக் கொடுக்கப்போகிறேன். அதன் பின்பு அவனை நான் கரங்களில் ஏந்தி, நாங்கள் இருவருமே மரணத்திற்கு காத்திருப்போம்.” 54ஆனால் அவன், “முதலில் ஒரு சிறு அப்பத்தை எனக்குத்தா” என்கிறான். மரித்துக் கொண்டிருக்கும் ஒரு விதவை பெண்ணிடம், அவளுடைய குழந்தையும் மரணத்தருவாயிலிருக்கும் போது, அவளிடமுள்ள கடைசி போஜனத்தை ஒரு மனிதன் கேட்பதென்பது வினோதமாயுள்ளது அல்லவா? தேவன் மிகவும் விசித்தரமான காரியங்களைச் செய்பவர். “முதலில் ஒரு சிறு அப்பத்தை எனக்குத்தா.” அவள் வேதத்தில் படித்திருக்கிறாள்.“நாம் அந்நியரை உபசரித்ததுண்டு என்று வேதம் கூறுகிறதல்லவா? ”நாம் அந்நியரை உபசரித்திருக்கிறோம். நாம் என்ன செய்கிறோம் என்று தெரியாம்லேயே தேவதூதர்களையும் உபசரித்திருக்கிறோம்.“சரி, நான் அப்படியே செய்கிறேன்” என்று அவள் சொன்னாள். அவள் திரும்பி உள்ளே சென்றபோது,என்னே! எந்த விசுவாசியும் கேட்க விரும்பும் மிகப் பெரிய ஆறுதல். “கர்த்தர் சொல்லுகிறதாவது.”அந்த வார்த்தைக்காக அவள் காத்துக் கொண்டிருந்தாள். “கர்த்தர் உரைக்கிறதாவது, கர்த்தர் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் பானையின் மாவு செலவழிந்து போவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை.” 55இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்கிறோம்? “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூடக் கொடுக்கப்படும்,'' ''சகோ. பிரன்ஹாமே, எனக்கு எப்படித் தெரியும்? எனக்கு எப்படித் தெரியும்?” எனக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று,தேவனை முதலில் வைத்து முன்செல்வதே. தியாகம்! வார்த்தையையும் ஆவியையும் ஒன்றாக கலக்கி, உங்களை சிலுவையில் கிடத்தி, “ஆண்டவரே, இதோ இருக்கிறேன்.”என்று சொல்லுங்கள்.எல்லாவற்றிலும் தேவனை முதலில் வையுங்கள். “கர்த்தர் உரைக்கிறதாவது. கர்த்தர் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் பானையில் மா செலவழிந்து போவது மில்லை,கலசத்தின் எண்ணெய் குறைந்து போவதுமில்லை.”அவளிடம் பேசுவது தேவனுடைய தீர்க்கதரிசி என்பதை அவள் அறிந்து கொண்டாள். ஓ, அவள் இருதயம் எவ்வளவாய் மகிழ்ச்சியினால் துள்ளியிருக்கும்! அவள் உள்ளே ஓடிப்போய் அப்பத்தை சுட்டுக்கொண்டு வந்து, தண்ணீருடன் அவனுக்குக் கொடுத்தாள். ஏற்கனவே குழி விழுந்திருந்த அவளுடைய கன்னங்களுடன் அவளுடைய கையும் நடுங்கினது. ஒரு சிறு அப்பத்தின் மூலம் தேவன் அவளைக் காக்க வந்து விட்டார் என்று அவள் அறிந்து கொண்டாள். 56ஓ, நீங்கள் தேவனுடைய ஒரு சிறு வாக்குத்தத்தத்தை ஏற்றுக்கொண்டு, எல்லாவற்றையும் சரிபடுத்தி, காரியங்களை வழியிலிருந்து அகற்றி, என்ன நேரிடுகிறதென்று பாருங்கள். அவிசுவாசத்தை உங்கள் இருதயத்தை விட்டு அகற்றி விடுங்கள். உங்களுக்குள்ள சிறு விசுவாசத்தை எடுத்துக்கொண்டு அதை சிலுவையின் மேல் வைத்து, “ஆண்டவரே, இவ்வளவு தான் என்னிடம் உள்ளது, எடுத்துக் கொள்ளும்'' என்று சொல்லி, ”கர்த்தர் உரைக்கிறதாவது'' என்று உங்கள் வாழ்க்கையில் நேரிடும் திருப்பத்தைக் கவனியுங்கள்.ஓ, அவர் என்றும் உள்ளது போலவே இன்றும் மாறாதவராய் இருக்கிறார். அவள் அந்த திருப்பத்துக் காகக் காத்துக் கொண்டிருந்தாள். ஒருக்கால் அது மிகவும் இருளாகத் தென்படலாம். ஆனால் (அன்றிரவு நான் பிரசங்கித்த விதமாக),காலை விடியும் முன்பு மிகவும் இருளாக இருக்கும். இரவிலே மிகவும் இருள் சூழ்ந்த நேரத்தில் தான் விடிவெள்ளி பிரகாசிக்கின்றது. சூரியன் உதிக்கப் போகின்றது என்பதை அது பிரதிபலிக்கின்றது. 57ஜெர்மனியில் ஒரு படம் வைத்திருக்கின்றனர். அதை 'மேகம்' என்றழைக்கின்றனர். அது லாஸ் ஏஞ்சலிஸிலுள்ள ஃபாரஸ்ட் லாணில் வைக்கப்பட்டுள்ள “சிலுவை மரணம்” என்னும் படத்திற்கு போட்டியாக அமைந்துள்ளது. லாஸ் ஏஞ்சலிஸிலுள்ள அந்த படம் இந்த அறையின் அகலத்திற்கு இருக்கும். அந்தப் படத்தைச் சுற்றி அவர்கள் ஒரு கட்டிடம் எழுப்பியுள்ளனர். உங்களில் அநேகர் அதை கண்டிருப்பீர்கள். ஆனால் ஜெர்மனியிலுள்ள இந்த படம் ''தேவதூதன்“ அல்லது ”மேகம் சூழ்ந்த நாள்“ என்னும் தலைப்பைக் கொண்டது. அப்படித்தான் அது அழைக்கப்படுகின்றது என்று நினைக்கிறேன். ஒரு கோணத்திலிருந்து அதைப் பார்க்கும் போது, அது பயத்தை விளைவிக்கும் ஒன்றாயுள்ளது. வெளிச்சம் அதன் மேல்பட்டு பிரதிபலிக்கும் போது, கோபம் நிறைந்த மேகங்கள் ஒன்றோடொன்று மோதி நகர்வது போல் காட்சியளிக்கும்படி அந்தப் படம் வரையப்பட்டுள்ளது... பயங்கர புயல் ஒன்று மோதி எல்லாவற்றையும் சின்னாபின்னமாக்குவது போல் அது காட்சியளிக்கிறது. ஆனால் வழிகாட்டி, ''அருகில் சென்று கூர்ந்து கவனியுங்கள்.“ என்கிறான். நீங்கள் அருகில் சென்று பார்த்தால்,அது பயங்கர மேகங்கள் அல்ல; அது தேவதூதரின் செட்டைகள் ஒன்றோடொன்று அடித்துக் கொண்டு, அவர்கள் மகிழ்ச்சியாயுள்ளனர். அது மாறுவேடத்திலுள்ள ஆசீர்வாதம். 58ஒருக்கால் இன்றிரவு உங்களுக்குள்ள வியாதி, இங்கு வருவதற்கென நீங்கள் செய்த தியாகம், இவையாவும் மாறு வேடத்திலுள்ள ஆசீர்வாதமாக இருக்கக் கூடும். செட்டைகளை ஒன்றாக சேர்ந்து அடித்து களிகூர, தேவதூதர்கள் இங்கு பிரசன்னராயிருக்கின்றனர். ஏனெனில், மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டா யிருக்கும், தேவதூதர்கள் களிகூருவார்கள் என்று வேதம் உரைக்கிறது. சற்று யோசித்து பாருங்கள். கர்த்தர் உரைக்கிறதாவது, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவருடைய கிருபை தீர்ந்து போகவே முடியாது. உங்கள் இருதயம் விரும்பும் எதையும் கொடுக்க அவர் சித்தமாயிருக்கிறார். 59நாம் தலைவணங்கி, சிறிது நேரம் ஜெபம் செய்வோம். நீங்கள் ஜெபசிந்தையில் இருப்பீர்களென நம்புகிறேன். உங்கள் கண்கள் மூடப்பட்டு, உங்கள் தலைகள் நீங்கள் உண்டாக்கப்பட்ட மண்ணுக்கு நேராக குனிந்திருக்கும் இந்நேரத்தில் இயேசு வரத் தாமதித்தால் அந்த மண்ணுக்கு நீங்கள் திரும்ப வேண்டியவர் களாயிருக்கிறீர்கள். “இங்குள்ள இரட்சிக்கப்படாதவர் யாராகிலும் உங்கள் கரங்களையுயர்த்தி, ”சகோ. பிரன்ஹாமே, என் வாழ்க்கை துன்பம் நிறைந்தது. நான் இரட்சிக்கப்படவில்லை. இன்றிரவு உங்கள் ஜெபத்தில் என்னை நினைவு கூருங்கள், சகோதரனே, என் கையையுயர்த்துகிறேன்“ என்று கூற விரும்புகிறீர்களா? இரட்சிக்கப்படாத யாராகிலும் - பையனோ, பெண்ணோ, மனிதனோ, ஸ்திரீயோ, யாராகிலும் நான் இனிமேலும் கேட்கப் போவதில்லை. உங்கள் கைகளையுயர்த்துங்கள். உங்களுக்காக ஜெபம் செய்வேன். 60என் வலது பக்கத்தில், தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, உன்னையும், உன்னையும், வேறெங்காகிலும் பின் பக்கத்தில் நடு வரிசையில் - உங்கள் கைகளையுயர்த்துங்கள். யாரும் உங்களைப் பார்க்கவில்லை. நானும் பரிசுத்த ஆவியும் மாத்திரமே காண்கிறோம். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப் பாராக. அது நல்லது. நடுவரிசையிலுள்ள யாராகிலும் கையுயர்த்தி “சகோ. பிரன்ஹாமே, நான் கிறிஸ்தவன் அல்ல. நான் பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து அதிக தூரம் அகற்றி விட்டேன். அதனால் அவர் என்னை தொந்தரவு செய்வதை விட்டுவிட்டார். ஆனால் உண்மையில் நான் தவறு என்று உணருகிறேன். நான் பரிசுத்தஆவியினாலே மறுபடியும் பிறக்கவில்லையென்று அறிந்திருக்கிறேன். அதற்கு நான் தகுதியல்ல என்று எனக்குத் தெரியும். நான் எல்லாவற்றையுமே அறிக்கை செய்யவில்லை, நான் தேவனுடைய அவசியங்கள் அனைத்தையும் சந்திக்கவில்லை” என்று சொல்வீர்களா? 61ஒருக்கால் நீங்கள் வியாதிப்பட்டிருக்கலாம். தேவனுடைய அவசியங்களை நீங்கள் சந்திக்கும் வரைக்கும் ஒரு உபயோகமுமில்லை. ''சகோ, பிரன்ஹாமே, நீண்ட காலமாக நான் கிறிஸ்தவ மார்க்கத்தை தழுவியுள்ளேன். ஆனால் தெய்வீக சுகமளித்தலை நான் எப்பொழுதுமே சந்தேகித்திருக்கிறேன். இந்த பரிசுத்த ஆவி சரிதானா என்று நான் வியந்ததுண்டு. “ ஓ, அருமையான சகோதரியே,அருமையான சகோதரனே, தேவனிடத்திலிருந்து அப்படி ஒன்றை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் தேவனுடைய அவசியம் ஒவ்வொன்றையும் சந்திக்க வேண்டும். அப்பொழுது நீங்கள் தேவனிடம் சரியாகி விட்டீர்கள் என்னும் உறுதியைப் பெற்றுக்கொள்வீர்கள். பின்பு தேவனுடைய வாக்குத்தத்தத்தை ஏற்றுக்கொண்டு அதை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். 62என் இடது பக்கத்தில் யாராகிலும் இருக்கிறார்களா?பின்னால் அமர்ந்துள்ள வாலிபர்களே, நீங்கள் கிறிஸ்தவர்கள். அல்லாமலிருந்தால், உங்கள் கைகளயுயர்த்தி, “சகோ. பிரன்ஹாமே, என்னை நினைவு கூரும்'' என்று சொல்லுங்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, பின் பக்கத்தில் உன் கையைக் காண்கிறேன். மிகவும் பின்னால், சீமாட்டியே, உன் கையைக் காண்கிறேன், ஆம், அங்கு அந்த சிறு பெண், ஆம், ஆம். அங்குள்ளவர்களைக் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. உங்களைக் கேட்கப் போவதெல்லாம், உங்கள் கைகைளையுயர்த்த வேண்டும் என்பதே என்று நான் வாக்களித்தேன். இப்பொழுது நாம் ஜெபம் செய்யப் போகிறோம். அப்படி ஜெபம் செய்யும் முன்பு (ஏறக்குறை இருபது முப்பது பாவிகள் கைகளை யுயர்த்தினர்), வியாதியாயுள்ள உங்களில் எத்தனை பேர் கைகளை யுயர்த்தி, “சகோ, பிரன்ஹாமே, தேவன் என் மீது இரக்கம் பாராட்டி, என்னைச் சுகப்படுத்த வேண்டுமென்று உங்கள் ஜெபங்களில் நினைவுகூருங்கள்” என்று சொல்வீர்களா?இருநூறுக்கும் மேற்பட்டவர் கைகளை யுயர்த்தியுள்ளனர்.சரி. ஜெபம் செய்வோம். 63எங்கள் பரலோகப் பிதாவே, இந்த விண்ணப்பங்களுடன் உமது சமூகத்தில் வருவது மிகவும் கிருபையாயுள்ளது. (ஒலி நாடாவில் காலி இடம்- ஆசி.). “'நான் உன் சிருஷ்டி கர்த்தர்''என்று சொல்லியிருக்கிறீர், இவர்கள் கைகளையுயர்த்தினர். அப்படியானால் விஞ்ஞானத்தை விட ஆவி மேலானது என்பதை அது காண்பிக்கிறது, பிதாவே,''என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரமாட்டான், என்னிடத்தில் வருபர் யாவருக்கும் நான் நித்திய ஜீவனை அளிப்பேன்'' என்று நீர் வாக்குரைத்திருக்கிறீர். ஆண்டவரே, இவர்கள் உம்முடையவர்கள். அவர்கள் இருக்கையில் அமர்ந்துள்ள இந்நேரத்திலேயே அவர்களுக்கு ஜீவனைத் தந்தருள்வீராக. அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வார்களாக. அவர்களை நீர் கடைசி நாளில் எழுப்பி, சபையின் கிரீடத்தில் பிரகாசிக்கும் கற்களாக பரலோகப் பிதாவாகிய தேவனிடத்தில் அவர்களை ஒப்புவிப்பீராக. பிதாவே, இதை அருளும். வியாதிப்பட்டவர்களுக்கும்,உபத்திரவப்படுகிறவர்களுக்கும் நான் ஜெபிக்கிறேன், அநேகருடைய கரங்கள் இன்றிரவு மேலே சென்றன, ஏனெனில் தேவன் உண்மையாக, அவளுக்கு அவசியமாயிருந்த ஒரு ஸ்திரீயை அவர்கள் கண்டனர். அந்த கடினமான நேரம் வருவதை அவள் கண்டாள். அதே நிலையில்- மரிக்கும் தருவாயிலுள்ள- அநேகர் இன்றிரவு இங்குள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தேவன் ஏற்கனவே தமது தீர்க்கதரிசிகளுக்கு கட்டளையிட்டுவிட்டார். எனவே எல்லாமே சரியாகி விட்டது. எல்லாம் நன்றாக முடிவுபெறும், எல்லாமே சரியாயுள்ளது என்னும் உறுதியை அவர்கள் பெற்றிருந்தால், அவர்கள் தேவனைக் குறித்து உறுதியுடையவர்களாயுள்ளனர் என்று அர்த்தமாகிறது. தேவன் தமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார் என்று அவர்கள் உறுதியுள்ளவர்களாயிருக்கின்றனர். ஆண்டவரே, அப்படி யானால், நீர் அன்பு கொண்டுள்ள, வியாதியாயுள்ள உமது பிள்ளைகளுடன் இன்றிரவு ஈடுபட்டு, அவர்களுடைய வியாதியை சுகப்படுத்தி, அவர்களுக்கு வல்லமையும், கிருபையும், விசுவாசமும் அருள வேண்டுமாறு ஜெபிக்கிறேன். பிதாவே, அப்படி செய்வீராக.. 64இன்றிரவு இங்குள்ள எல்லா ஊழியக்காரர்களையும் - உமது விலைமதிக்க முடியாத தீர்க்கதரிசிகளை- ஆசீர்வதிப்பீராக. ஆண்டவரே, அவர்களை ஆசீர்வதிக்க வேண்டுமாய் ஜெபிக்கிறோம்.அவர்கள் இந்த ஜனங்களின் குடும்பங்களை ஆசீர்வதித்து, அவர்கள் வாழ்நாள் மட்டும், அவர்களுடைய வீடுகளில் ஜீவனையளிக்கும் ஆகாரம் இருக்க அருள்புரியும். அவர்களுடைய கலசம் வற்றிப்போகாமலும், பானையில் மாவு குறையாமலும் இருப்பதாக. இந்த தேசத்திலுள்ள சபைகள் அனைத்திலும் ஆவிக்குரிய ஆகாரம் கிடைப்பதாக. ஆண்டவரே, பசியுள்ளவர்களையும் தேவையுள்ளவர்களையும் அது போஷிப்பதாக, ஆண்டவரே, அதை அருளும். நாங்கள் உம்மை நேசிக்கிறோம். நீர் முந்தி எங்களை நேசித்தீர் என்று நாங்கள் அறிவோம். நாங்கள் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து எங்களுக்காக மரித்து- குற்றமுள்ளவர்களுக்காக குற்றமற்றவர் மரித்து- எங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக அவர் மரித்து, தேவனோடு எங்களை ஒப்புரவாக்கினார். நாங்கள் ஏதேன் காலம் முதற்கொண்டே இழக்கப்பட்ட நிலையில்,ஒன்றுமே செய்யமுடியாதவர்களாய், தேவனும் அவருடைய குமாரனும் இல்லாதவர்களாக இருந்தோம். எங்கள் பிதாக்களின் அக்கிரமங்கள் எங்களை பாவத்தின் குழப்பத்தில் ஆழ்த்தியது. இயேசு எங்கள் மேல் அன்பு கூர்ந்ததனால், தேவனுடைய சித்தத்தின்படி அவர் வந்து, அவருடைய சொந்த ஜீவனை கல்வாரியில் ஒப்புக்கொடுத்து, எங்களை தேவனுக்கென்று மீட்டுக்கொண்டார். பிதாவே, உமது எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். 65நாங்கள் கடைசி காலத்தின் நிழல்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாளை இரவு என்பது ஒன்று இராமல் போகலாம். ஆண்டவரே, எனக்குத் தெரியாது. அது உமக்கே தெரியும். இன்றிரவு யாராகிலும் பிரவேசிக்கக் கூடுமானால்,பிதாவே பரிசுத்த ஆவியை அனுப்புமாறு வேண்டிக்கொள்கிறேன். “'சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷ குமாரன் வரும்போதும் நடக்கும்” என்று நீர் கூறியிருக்கிறீர். சோதோமின் நாட்களில் மூவகை ஜனங்கள் இருந்தனர் - பாவிகள், வெது வெதுப்பான சபை அங்கத்தினர்கள், தெரிந்துகொள்ளப்பட்ட வர்கள் (வெளியே அழைக்கப்பட்டவர்கள்). ஒரு பெரிய செய்தியுடன் வந்த இரு ஊழியக்காரர்களை சோதோமியர் ஏற்றுக்கொண்டனர். ஆபிரகாமின் கூட்டம் ஒரு அடையாளத்தைப் பெற்றுக்கொண்டது. அந்த அடையாளம் ஆடையில் தூசுபடிந்த ஒரு மனிதன். அவர் அந்நியராயிருந்தபோதிலும், ஆபிரகாமை அறிந்திருந்தார், சாராளை அறிந்திருந்தார், அவள் பெயர் என்னவென்று அறிந்திருந்தார். சாராள் இருந்த கூடாரத்துக்கு தன் முதுகை திருப்பி, ''சாராள் ஏன் சிரித்தாள்?'' என்று கேட்டார். ஓ, தேவனே, சபை உறக்கத்தினின்று விழித்து அதை காணட்டும். ''சோதோமின் நாட்களில் நடந்தது போல,மனுஷகுமாரன் வருகையிலும் நடக்கும்.'' என்று இயேசு கூறினார். அதே தேவன் அவருடைய சபையில் மாம்சத்தில் தோன்றி, அதே அடையாளத்தைக் காண்பிப்பார். ஆண்டவரே, இன்றிரவு மறுபடியும் அதை அருளும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 66நேசிக்கிறேன், நேசிக்கிறேன் (அவரை ஆவியில் இனிமையாகத் தொழுது கொள்ளுங்கள்) முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் ஓ, ஒரு செய்திக்குப் பிறகு நீங்கள் சுத்தமாக்கப்பட்டவர்களாக உணருகிறீர்கள் அல்லவா?பரிசுத்த ஆவி உங்கள் இருதயத்தை எல்லா அவிசுவாசத்தினின்றும் சுத்திகரித்து, உங்களை மீண்டும் தேவனுடைய பாதைக்கு கொண்டு வருகிறார். ஓ, அவரை தொழுதுகொள்ள இதுவே நேரம். செய்தி கொடுத்து முடிந்து விட்டது.எனவே மறுபடியுமாக'நேசிக்கிறேன்' என்னும் பாடலைப் பாடி அவரை ஆராதிப்போம். எல்லோரும், இப்பொழுது அமைதியாகவும், இனிமையாகவும், உங்கள் கண்களை மூடி, உங்கள் ஆவிக்குரிய கண்களினால் அவரைப் பாருங்கள். அந்த விதவைக்கு அவர் என்ன செய்தாரென்று பாருங்கள்.அந்த விதவையைப் போலவே நீங்களும் அவருக்கு அருமையான வர்கள். உங்கள் ஜீவனையும் அவர் பாதுகாத்து வந்திருக்கிறார். அவரை நீங்கள் நேசிக்கிறீர்கள் அல்லவா? நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் மகத்தான வைத்தியர் இப்பொழுது அருகில் உள்ளார் அனுதாபங் கொள்ளும் இயேசு அவர் தளர்ந்த இருயத்திற்கு பேசி உற்சாக மூட்டுகிறார் இயேசுவின் நாமமேயன்றி வேறல்ல சேராபீன் பாட்டிலே மிக இனிய இசை மரிக்க வேண்டிய நாவிலே இனிய நாமம் இதுவரை பாடாத மிக இனிய பாட்டு ஓ, இயேசு, ஆசீர்வதிக்கப்பட்ட இயேசு 67'ஆர்கன்' இசைக் கருவியில் அவர் மிருதுவாக சுருதி கொடுக்கும்போது (சகோ, பிரன்ஹாம் மெளனமாக, 'மகத்தான வைத்தியர்' என்னும் பாடலை இசைக்கிறார் - ஆசி). அந்தப் பாடலை நான் கேட்கும் போது, அது ஒன்றை என் நினைவுக்கு கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்தியானாவிலுள்ள ஃபோர்ட் வேயின் என்னுமிடத்தில், டன்கர்ட் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு பெண் அமர்ந்து கொண்டு பியானோ வாசித்துக் கொண்டிருந்தாள். அவள் பெந்தெகொஸ்தே கூட்டத்தை சேர்ந்தவள் அல்ல. ஆனால் அவளுக்கு நீண்ட கூந்தல் இருந்தது, அவள் அதை பின்னால் கொண்டை கட்டியிருந்தாள். நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க சென்றேன். வரிசையில் முதலாவதாக ஒரு சிறுவன் இருந்தான். அவன் இளம்பிள்ளை வாதத்தினால் ஊனமாயிருந்தான். அவனை தூக்கி வைத்துக் கொண்டிருந்த சகோதரியின் கைகளிலிருந்து நான் அவனை வாங்கிக்கொண்டு, “உண்மையாகவே மகத்தான வைத்தியர் இங்குள்ளார். அவர் எல்லா இருதயங்களின் இரகசியங்களையும் அறிந்திருக்கிறார்” என்று கூறி விட்டு, அங்கு குழுமியிருந்த பல ஆயிரக்கணக்கான ஜனங்களிடம், ''நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?“ என்று கேட்டேன். 'ஆம்' என்று பதில் வந்தது. அவர்கள் எல்லோரும் அதை விசுவாசித்தனர். ஆனால் கூட்டத்தின் முதல் இரவாக அது இருந்தபடியால்,அவர்கள் அதை சற்று தள்ளி வைத்திருந்தனர். செய்தியைப் புரிந்து கொள்ள அவர்களுக்குக் கடினமாயிருந்தது. 68நான்,“இந்த பையன் யாரென்றும் அவனுடைய பெயர் என்னவென்றும் கர்த்தராகிய இயேசு என்னிடம் கூற முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? அவர் அப்படி செய்தால் நீங்கள் விசுவாசிப்பீர்களா? ஆபிரகாமைச் சந்தித்து சாராள் என்ன செய்தாளென்று அறிந்த அதே தூதனாகத்தான் அது இருக்க வேண்டுமல்லவா? நாத்தான்வேல் வந்தபோது அவன் யாரென்பதை அறிந்து, பேதுருவை அறிந்து அவனைப் பெயர் சொல்லி அழைத்து, கிணற்றடியிலிருந்த ஸ்திரீயிடம் எல்லாவற்றையும் கூறின அதே இயேசுவாக அது இருக்க வேண்டுமல்லவா?'' என்றேன். அவர்கள் எல்லோரும் ஆமோதித்து கைகளையுயர்த்தினர். அது அப்படித்தான் இருக்க வேண்டுமென்று அவர்கள் கருதினர். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அந்தப் பையன் யாரென்று வெளிப்படுத்தத் தொடங்கினார். அவர் அப்படி செய்த போது, அந்த சிறுவன் என் கைகளிலிருந்து தாவி கீழே குதித்து ஒடி, மேடையிலிருந்து கீழே குதித்தான். அச்சிறுவனின் முன்னால் நாற்காலியில் அமர்ந்திருந்த அவன் தாய் அதைக்கண்டு மயங்கி விழுந்தாள். அவன் இங்கு மங்கும் ஓடினான். பியானோ வாசித்துக் கொண்டிருந்த அந்த ஆமிஷ் பெண், அல்லது டன்கர்ட் பெண்ணின் முகம் வெளுத்தது. அவள் மேலே குதித்தாள். அப்பொழுது அவள் கூந்தல் அவிழ்ந்து பின்னால் தொங்கியது. அவள் வெள்ளை உடை உடுத்திருந்தாள். காண்பதற்கு ஒரு தேவ தூதனைப் போலிருந்தாள். அவள் அந்நிய பாஷையில் பாடத் தொடங்கினாள். பியானோவும் ஒரு சுருதியும் கூட தவறாமல் தானாகவே இந்த பாடலை இசைத்தது: மகத்தான வைத்தியர் இப்பொது அருகில் உள்ளார். அனுதாபங் கொள்ளும் இயேசு அவர் தளர்ந்த இருதயத்திற்கு பேசி உற்சாகமூட்டுகிறார் இயேசுவின் நாமமேயன்றி வேறல்ல. 69அப்பொழுது ஜனங்கள் திரண்டு பீடத்தண்டை வந்து கதறி அழுது, வரிசைகளில் கீழே விழுந்து, ''தேவனே, எங்களுக்கு இரங்கும்“ என்று, கூச்சலிட்டனர். ஓ, என்ன ஒரு கூட்டமாக அது இருந்தது! அந்த மகத்தான வைத்தியர் இப்பொழுதும் இங்குள்ளார். அவர் தவறினதேயில்லை. அவர் ஒருக்காலும் தவறவே முடியாது. இங்குள்ள எத்தனை பேர் உங்கள் முழு இருதயத்தோடு பயபக்தியுடன் அதை விசுவாசித்து, தேவனுடைய வல்லமையினால் சுகம்பெறுவதற்கு இன்றிரவு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? இங்கு அமர்ந்துள்ள மூன்று பேர்களைத் தவிர, இக்கட்டிடத்திலுள்ள வேறு யாரையாவது நான் அறிவேனானால் அன்றொரு நாள் பேட்டியின் போது அர்கன்சாசிலிருந்து வரும் இம்மூன்று பேர்களுடன் உரையாடினேன். சகோ. பாட் டைலர்.அவர் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்திருந்து, இப்பொழுது இரட்சிக்கப் பட்டவர்; இங்கு அமர்ந்துள்ள சகோ. வில்லியம், இங்கு அமர்ந்துள்ள என் ஆப்த நண்பர் சகோ.ஜின் கோட், இவர்கள் மூவரை மாத்திரமே இக்கட்டிடத்தில் நான் அறிந்திருக்கிறேன். மற்றபடி பொதுவான ஜனங்கள் அமர்ந்துள்ளதை அறிந்திருக்கிறேன். 70நான் கொரானை ஒரு கையிலும், வேதாகமத்தை ஒரு கையிலும் ஏந்திக்கொண்டு ஒரு லட்சம் பேர் முன்னிலையில், ''இவைகளில் ஒன்று சரியாயிருக்க வேண்டும். மற்றொன்று தவறாயிருக்க வேண்டும்“ என்றேன். எல்லா மார்க்கங்களிலும் கிறிஸ்தவ மார்க்கமே; அவர்களிலும் முழு சுவிசேஷகர் மாத்திரமே இயேசு கிறிஸ்து இன்றும் உயிரோடிருக்கிறார் என்று நிரூபிக்க முடியும். மற்றைய கிறிஸ்தவ மார்க்கத்தினரிடம் வேதசாஸ்திரம் உள்ளது. அவர்கள், ”எங்களிடம் அதிக மனோதத்துவம் உள்ளது'' என்று அதைக் குறித்து உங்களிடம் கூறுவார்கள். முகம்மதியர்கள், ''எங்களிடமும் மனோதத்துவம் உள்ளது. நீங்கள் இயேசுவைக் குறித்து எவ்வளவு கூச்சலிடுகிறீர்களோ, அவ்வளவு எங்கள் தீர்க்கதரிசியைக் குறித்தும் நாங்கள் கூச்சலிட முடியும். எங்கள் தீர்க்கதரிசி எங்களுக்கு எதையும் வாக்களிக்கவில்லை. ஆனால் உங்கள் இயேசுவோ, அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுவார் என்றும், அவர் உங்களுக்குள்ளாக ஜீவிப்பதனால் அவர் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள் என்றும் வாக்களித்தார். எங்கள் தீர்க்கதரிசி மரித்து கல்லறையில் இருக்கிறார் என்றும், உயிரோடெழுந்த இயேசுவை நீங்கள் பெற்றுள்ளதாகவும் உரிமை கோருகிறீர்களே! அவர் கிரியை செய்வதை நாங்கள் காணட்டும் “ என்கின்றனர். 71நீங்கள் சில கிரேக்க சொற்களை வைத்துக்கொண்டு,அந்த வேதபண்டிதர்களிடம் தர்க்கித்து, நீங்கள் அனைவருமே குழப்ப முற்றிருக்கலாம். ஆனால் அதை இந்த மக்களிடையே பலப்பரீட்சைக்கு கொண்டு வராதீர்கள். நீங்கள் எதைக் குறித்து பேசுகின்றீர்களோ, அதை பெற்றிருங்கள். நீங்கள் அதை அறிந்திருப்பது நல்லது. அதன் காரணமாகத்தான் அங்கு அனுப்புவதற்கு மிஷனரி மார்கள் கிடைப்பது கடினமாயுள்ளது. அந்த ஜனங்கள், தாங்கள் என்ன பேசுகின்றனர் என்பதை அறிந்துள்ளனர். அவ்வாறே நீங்களும் அறிந்திருப்பது நல்லது. ஏனெனில் நீங்கள் கிரியைகளில் அதை காண்பிக்க உங்களை அழைப்பார்கள். ஆனால் நண்பர்களே, நமது இயேசு உண்மையுள்ளவர் (அவர் அளித்துள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் சத்தியமானது) என்பதை இன்றிரவு நான் அறிந்துள்ளதற்காய் நன்றியுள்ளவனா யிருக்கிறேன். என்னால் இங்கு யாரையாகிலும் சுகப்படுத்த முடியுமானால், நான் நிச்சயம் செய்வேன். நான் அப்படி செய்யாதிருந்தால், மாய்மாலக்காரனாயிருப்பேன். ஆனால் என்னால் சுகப்படுத்த முடியாது, ஆனால் தேவன் சபைக்கு ஒரு வரத்தை அளித்துள்ளார், அவர் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார். 72லூத்தரின் நாட்களில் நீதிமானாக்கப்படுதல் என்பதன் மூலம் நாம் வாழ்ந்தோம். வெஸ்லியின் நாட்களில் பரிசுத்தமாக்கப்படுதல் என்பதன் மூலம் நாம் வாழ்ந்தோம். சபை அப்பொழுது சிறுபான்மையோரைக் கொண்டிருந்தது. பெந்தெகொஸ்தேயினரின் நாட்களில் நாம் பரிசுத்தஆவியின் அபிஷேகம் மற்றும் வரங்கள் புதுப்பிக்கப்படுதல் என்பவைகளின் மூலம் நாம் வாழ்ந்தோம். இப்பொழுது நாம் உண்மையில் சிறுபான்மையோராக இருக்கிறோம் தேவனுடைய குமாரனின் வருகை. இங்கு அவர்கள் விசுவாசித்தினால் நீதிமான்களாக்கப்பட்டனர்; இங்கு பரிசுத்தமாக்குதலின் கீழ் அவர்கள் சத்தமிட்டனர்; இங்கு அவர்கள் வரமாகிய அந்நியபாஷை பேசினர்; ஆனால் இப்பொழுது 'நெகடிவ்'வும் 'பாசிடிவ்வும் - கூர்நுனிக் கோபுரத்தின் மேல் தலைக்கல் வந்து கொண்டிருக்கிறது. இது கடைசி காலம். அப்பொழுது கிறிஸ்துவும் சபையும் ஒரே போலாகி, அது மெதோடிஸ்டு காலத்தில், லூத்தரின் காலத்தில் மற்றும் முற்காலத்தவர் மத்தியிலிருந்து மரித்தோரை அழைக்கும். அப்பொழுது உயிர்த்தெழுதல் இருக்கும். முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம் ஜாமங்களில் நித்திரையடைந்தவர்கள் இந்நாட்களில் ஒரு நாளில் உயிரோடெழுந்து, இயேசுவை ஆகாயத்தில் சந்திப் பார்கள், நண்பர்களே, அந்த மணிநேரம் வந்துவிட்டது. கர்த்தருடைய வருகை சமீபித்து விட்டது. 73நாம் எருசலேமை நோக்கி, யூதர்கள் நமக்காக குருடாக்கப்பட்டதைக் காண்கிறோம். அத்திமரம் துளிர் விட்டுக்கொண்டிருக்கிறது. “மற்றெல்லா மரங்களும்” என்று அவர் கூறியுள்ளார். பில்லிகிரகாம் பெயர் கிறிஸ்தவர்களிடையே எழுப்புதலை உண்டாக்கினார். ஒரல் ராபர்ட்ஸ் பெந்தெகொஸ்தேயினரிடையே எழுப்புதலை உண்டாக்கினார். இப்பொழுது தேவனுடைய குமாரானாகிய இயேசு, தலைக்கல்லுக்காக ஜனங்களை இழுக்கவும், தேவனுடைய குமாரனை மறுபடியும் கொண்டு வரவும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகைக்காக காரியத்தை பூர்த்தி செய்யவும்,இந்த மீதியானவர்களிடம் வந்துள்ளார். அவர், “சோதோமின் நாட்களில் நடந்தது போல,மனுஷகுமாரன் வருகையிலும் நடக்கும்” என்றார். என் முதுகை நீங்கள் காணும்படியாக உங்களிடம் திருப்புகிறேன். அது மனிதன் அல்ல என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அங்கு உட்கார்ந்திருந்த மனிதன் சுண்ணாம்பு, பொட்ரோலியம் போன்ற உலகிலுள்ள பதினாறு மூலப் பொருட்களை தேவன் எடுத்து... (சகோ, பிரன்ஹாம் ஊதுகிறார்- ஆசி), அவைகளை ஒன்றாக ஊதி ஒரு சரீரத்தை உண்டாக்கி,அதற்குள் நுழைந்து ஜீவிக்கிறவராக இருந்தார். 74இயேசு கிறிஸ்துவும் அவ்வாறே இருந்தார். அவர் தேவனுடைய குமாரன். அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன். அவருடைய மாம்சம் மனிதனாயிருந்தது, ஆவியோ தேவன். கடைசி நாட்களில் அவர் தம்முடைய சபைக்குள்ளாக வருவதாக வாக்களித்துள்ளார். “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனென்றால் நான் உங்களோடிருந்து உங்களுக்குள் இருப்பேன். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.” பாருங்கள்? அந்த மகத்தான வைத்தியர் இங்குள்ளார். அவர்,''சோதோம் கோமோராவின் அடையாளம்'' என்றார். அது என்ன? நமது செய்தித்தாள்களைப் பாருங்கள். ''ஆண் புணர்ச்சிக்காரர்கள். பத்து ஆண்டு காலத்தில் இந்த கெட்ட நடத்தை 40 சதவிகிதம் உயர்ந்துள்ளது.'' என்று அவை கூறுகின்றன. பலவிடங்களில் பூமியதிர்ச்சிகள்,வருகையின் எல்லாவிதமான அடையாளங்களும், சபை விழுந்து போதல், முடிவு காலம் இங்குள்ளது. ஆனால், நாங்கள் பிரசங்கித்து வருவது போன்று தேவனும் தம் அடையாளங்களைக் காண்பித்து வருகிறார். இந்த வேதாகமம் சத்தியமானால் அது சத்தியம் தான் அதன் நோக்கத்துக்காக நான் மரிக்கவும் ஆயத்தமாயுள்ளேன், வேதாகமம் முற்றிலும் உண்மை . இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார். நாம் அவருடைய ஆவியினால் நிறைந்த அவருடைய சபையாயிருக்கிறோம். அப்படியானால் நமக்குள் இருக்கும் அவருடைய ஜீவன், தேவனுடைய குமாரனுக்குள் அது இருந்தபோது விளைவித்த அதே ஜீவனைத் தோன்றச் செய்யும் தேவனுடைய பரிசுத்த ஆவி நமக்குள் வாசம் செய்தால் 75தேவனுடைய மகிமைக்காகவும் அவருடைய சபையின் நிமித்தமாகவும், உங்கள் வியாதிக்காகவும்;உங்களில் வியாதியுள்ளோரும் உபத்திரவப்படுபவர்களும், அவருடைய வஸ்திரத்தின் ஒரத்தைத் தொட்டு, அவருடைய வஸ்திரத்தின் ஒரத்தைத் தொட்ட அந்த ஸ்திரீயிடம் அவர் கூறினது போல், அவருடைய ஊழியக்காரனாகிய என் மூலம் அவரை உங்களிடம் பேசவைக்க முடியுமா என்று பாருங்கள். ஆண்டவர் அதை அருளுவாராக. அது உங்களை அதிகமாக விசுவாசிக்கச் செய்து, உங்கள் சுகமளித்தலை ஏற்றுக் கொள்ளச் செய்யுமா? தேவன் உங்களை அவ்வாறு அழைப்பாரானால், அல்லது அழைப்பதை நீங்கள் காண்பீர்களானால், அது சுகமளித்தலை நீங்கள் ஏற்றுக்கொள்ளச் செய்யும் என்று எத்தனை பேர் விசுவாசிக்கின்றீர்கள்! உங்கள் கைகளையுயர்த்துங்கள். ஆண்டவர் அதை அருளுவாராக. (''மகத்தான வைத்தியர்'' என்னும் பாடலை வாசித்துக் கொண்டேயிரு.அப்படி நான் ஏவப்படுகிறேன்.). 76நான் திரும்பி உங்களைப் பார்க்கப் போகின்றேன். சதோதரரே, நான் முயலவில்லை. உங்களுக்கு... சகோ. டேவிட் தேவன் எனக்கு சாட்சி. நான் ஜனங்களிடம் வெளிப்படையாய் கூறினது போல், அது நானல்ல. அதற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. நான்... தேவன் யாராவது ஒருவரை உபயோகிக்க வேண்டும். எந்த கரங்களும் தகுதியுள்ளவையல்ல. தேவனே அவைகளைத் தகுதியாக்குகிறவர். பாருங்கள், அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவர் உலகத்தோற்றதுக்கு முன்பே தெரிந்து கொள்கிறார். அது செய்யப்படவேண்டும். அது நிறைவேற்றப்பட வேண்டும். 77சபை கறைதிரையற்றதாய் அங்கு இருக்கப் போகின்றது. தேவனுடைய கிருபை அதை செய்யும். அது செய்யத்தான் வேண்டும். அதற்கு கிருபை அவசியம். அவர் ஆபிரகாமிடம் பேசினபோது, சாராள் சந்தேகித்தாள். அதற்காக அவர் அவளை அப்பொழுதே கொன்றிருக்கலாம். ஏனெனில் அவிசுவாசம் தான் மிகவும் பயங்கரமான பாவம். அது ஒன்றுதான் பாவம். அவள் சந்தேகித்து தனக்குள் சிரித்தாள். தூதன் கூடாரத்துக்குள் இருந்த அவளுடைய சிந்தையை பகுத்தறிந்தார். அது சரியா? பின்னை ஏன் அவர் சாராளைக் கொல்லவில்லை? ஏனெனில் அவள் ஆபிரகாமின் ஒரு பாகமாக இருந்தாள். அப்படியானால் அவர் ஆபிரகாமையும் கொன்றிருக்க வேண்டும். அது போல், நாம் கிறிஸ்துவின் சரீரத்தில் இருக்கும் போது, இயேசுவின் ஒரு பாகமாக இருக்கிறோம். எனவே நாம் அறியாமையினால் காண்பிக்கும் நமது விசுவாசம், சாராளுக்கு மன்னிக்கப்பட்டது போல் நமக்கும் மன்னிக்கப்படுகின்றது. சாராள் பயந்து போனாள். 78ஏதோ ஒன்று மேடையின் மேல் பிரத்தியட்சமாகிறதென்று நீங்கள் விசுவாசிக் கின்றீர்களா? ஓ, என்னால் அதை விவரிக்க முடிந்தால் நலமாயிருக்கும்! நான் திரும்பி முதுகைக் காண்பிக்க வேண்டும். ஒரு ஸ்திரீக்கு தோல் அரிப்பு இருப்பதைக் காண்கிறேன். நீ அவரைத் தொட்டாய். அது உன்னை விட்டுப்போய் விடும். ஏனெனில் உன்னைச் சுற்றிலும் வெளிச்சம் உள்ளது. நீ விசுவாசித்தால் எல்லாம் கூடும். இப்பொழுது விசுவாசி. இது உங்கள் சிந்தையை படிக்கும் மனோதத்துவம் அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள். நான் என் முதுகை உங்களிடம் திருப்புகிறேன். இந்த பக்கத்திலுள்ளவர்களைக் குறித்தென்ன? சகோதரியே, சகோ, டேவிட் இது ஒருமுறை ஆஞ்சலிஸ் ஆலயத்தில் செய்யப்பட்டது. உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?...நீங்கள் பார்க்கும் படியாக நான் உங்களிடம் பேசிக்கொண்டிருக் கிறேன், எனக்கு ஜனங்களிடம் தொடர்பு இல்லை என்பதை அது காண்பிக்கிறது, நீங்கள் புரிந்து...புரிந்து கொண்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் ஜனங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டுமென்று தேவனுடைய கிருபையைக் கோருகிறேன். 79நான் ஒரு வாலிபப் பெண்ணைக் காண்கிறேன். அவள் தூரத்திலிருந்து வருகிறாள். அவள் இந்த இடத்தைச் சேர்ந்தவள் அல்ல. மழை அதிகமாகப் பெய்து, நிறைய மரங்களும் பாசியும் உள்ள இடத்திலிருந்து அவள் வருகிறாள். அவள் ஒரிகானைச் சேர்ந்தவள். அவளுக்கு காக்காய்வலி உள்ளது. அவள் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். இயேசுகிறிஸ்து உன்னை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறாயா? நீங்களும் அவளின் நிமித்தம் அதை ஏற்றுக்கொள்வீர்களா?சகோதரியே, எழுந்து நில்.வீடு செல். நான் பிசாசைக் கடிந்து கொள்கிறேன். உன் முழு இருதயத்தோடும் நீ விசுவாசிக்கிறாயா? சரி. 80நடு வரிசையில் யாரோ ஒருவருக்கு விசுவாசம் உள்ளது. சந்தேகப்பட வேண்டாம். சகோ. ஷோர் நான் உங்களிடம் பேசுகிறேன். நாம் யாரோ ஒருவரை அங்கு விடுகிறேன்... ஜெப அட்டைகள் வழங்கப்படவில்லை. எனவே யாரையும் மேடைக்கு அழைக்காமல் அது எளிதாகி விட்டது. அவர்களும் அதை காணும்படியாக. ஆம், மெலிந்த ஒரு ஸ்திரீ அங்கிருக்கிறாள். அவளுக்கு புற்று நோய். அவள் இன்று ஆஸ்பத்திரிக்கு சென்றிருக்க வேண்டும். அவள் முன் வரிசையில் அமர்ந்திருக்கிறாள். ஒருவாறு மெலிந்த ஸ்திரி. அவள் பெயர் குமாரி பீடர்ஸன்.பாருங்கள்? சரி சீமாட்டியே, தேவன் மேல் விசுவாசம் வை, பரலோகத்தின் தேவன் தாமே, அதை மறுபடியும் யாரும் காணாதபடிக்கு, அந்த பிசாசைக் கொன்று போடுவாராக, நீ தேவனுடைய குமாரனை விசுவாசிக்கிறாயா? உன் முழு இருதயத்தோடும் அவரை விசுவாசிக்கிறாயா? அவர் மேல் விசுவாசம் வைத்திரு. அது ஒன்று மாத்திரமே நீ செய்ய வேண்டியவளாயிருக்கிறாய். சரி. 81இந்த பக்கத்திலுள்ளவர் எல்லாரும் விசுவாசிக்க ஆயத்தமாயிருக்கிறீர்களா? இந்த போதகரிடம் நான் பேசட்டும். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? அங்குள்ள வேறு யாரோ ஒருவர் கூட விசுவாசிக்கிறார் என்று நினைக்கிறேன். நான் உங்களிடம் பேசுகிறேன் என்பதை நீர் அறிந்துகொள்ள, எனக்கு பதிலளியும், தேவனுடைய வல்லமை, சிந்தையைப்பற்றின எல்லா காரியங்களையும் மேற்கொண்டு ஆவிக்குரிய ராஜ்யத்தை அடைந்து விடுகிறது. ஆம், எனக்குப் பின்னால் ஒரு ஸ்திரீ இருக்கிறாள். அவளுக்கு என்ன கோளாறு என்று அவளுக்குத் தெரியவில்லை. அவள்... ஓ, அந்த ஏழை ஸ்திரீ! அவளுக்கு ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஐந்து அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஆனால் அது என்ன என்பதை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. அது என்னவென்று அந்த மருத்துவர்களால் அறிந்து கொள்ளவே முடியவில்லை. ஓய்வுக்காக அவள் அரிசோனாவிலிருந்து இங்கு அனுப்பப்பட்டிருக்கிறாள். அவள் லூயிசியானாவைச் சேர்ந்தவள். அவளுடைய பெயர் திருமதி பியர்சன். சரி, எனக்குப் பின்னால் எங்கோ உள்ள திருமதி பியர்சனே எழுந்து நில், என்னைப்பார், நான் தேவனுடைய தீர்க்கதரிசியென்று விசுவாசிக்கிறயா? எனக்கு உன்னைத் தெரியாது. அது உண்மையானால்,உன் கையை ஆட்டு, நாம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகாதவர்கள். நான் கூறின அனைத்தும் உண்மையே,அது சரியா?உனக்கு என்ன கோளாறு என்று மருத்துவர்கள் அறிந்து கொள்ள முடியவில்லை. அது உன் நரம்புகளுடன் சம்பந்தப்பட்டது. நீ அமைதியாயிருந்து, விசுவாசித்தால், சுகமடைந்தவளாக வீடு திரும்புவாய். தேவனை விசுவாசி. தேவனுடைய குமாரன் உயிரோடெழுந்தார் என்று விசுவாசிக்கிறாயா? 82இந்த பக்கத்தில் உள்ளவரைக் குறித்தென்ன? பின்னாலிருப்பவர்களே, நீங்கள் விசுவாசிக்க ஆயத்தமா யிருக்கிறீர்களா? பாட் நீ கிறிஸ்தவனாயிருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறாயா? நீ முன்பு வாழ்ந்திருந்த வாழ்க்கையிலிருந்து வெளியேறி, இப்பொழுது கிறிஸ்தவனாயிருப்பது அற்புதமல்லவா? இங்கு ஒரு சீமாட்டி இருக்கிறாள். அது ஒரு ஸ்திரீ, ஒரு மனிதன் ஒரு பிள்ளை. அந்த ஸ்திரீ தேவனுடன் தொடர்பு கொண்டிருக்கிறாள். அவள் என் பின்னால் இருக்கிறாள். அவளுக்கு ஒரு விதமான வயிற்று வலி ஏற்படுகின்றது. அதன் பின்பு அவள் பலவீனமடைகிறாள். அவளும் இந்த இடத்தைச் சேர்ந்தவள் அல்ல. அவள் வரண்ட பிரதேசத்திலிருந்து வருகிறாள். அவள் கான்சாஸ் பட்டினத்தைச் சேர்ந்தவள். அவள் கணவர் ஒரு போதகர். அதோ அவள் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். உன்னை எனக்குத் தெரியாது. அது உண்மையானால், சீமாட்டியே, இப்படி உன் கைகளை ஆட்டு.சரி, ஐயா, சரி, வீடு சென்று,கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து சுகம் பெறு. கர்த்தரை விசுவாசிக்கிறாயா? 83கட்டிடத்தில் எல்லா பாகங்களிலும் உள்ளவர்களே, கர்த்தரை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக, அவர் இங்கிருக்கிறார். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். விதவை எங்கிருந்தாள் என்று எலியாவுக்குக் காண்பித்த அதே தேவன், நீங்கள் எங்கு அமர்ந்து கொண்டு ஜெபம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கும் காண்பிக்க முடியும். ஏனெனில் அது நேற்றும் இன்றும் மாறாதவராயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் ஆவி, அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இங்குள்ள ஒவ்வொரு நபரும் ஒருவர் மேல் ஒருவர் கைகளைப் போடுங்கள். நான் உங்களுக்குப் பொதுவாக ஜெபிக்கப்போகின்றேன். இந்த இடத்திலேயே விசுவாசியுங்கள். ஏதோ ஒன்றுள்ளது என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள்..நீங்கள் ஒவ்வொருவரும்.நீங்கள் விசுவாசிகள் அல்லவா? அப்படியானால் 'ஆமென்' என்று சொல்லுங்கள் (சபையோர் 'ஆமென்' என்கின்றனர். ஆசி). தேவனுடைய சமுகத்தில் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்த பிழையற்ற நிரூபணமுடைய நீங்கள், ஒருவர் மேல் ஒருவர் கைகளை போட்டு, ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள். 84எங்கள் பரலோகப் பிதாவே, இங்கு காத்திருக்கும் கூட்டத் தினரை உமது கரங்களில் ஒப்புவிக்கிறேன். தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்பின இவர்கள் அனைவரும் தங்கள் இடங்களில் ஒரு நல்ல சபையைச் கண்டுபிடிப்பார்களாக. ஆண்டவரே, இங்கு வியாதியாயுள்வர்கள் சுகமடைவார்களாக. இவர்கள் வாழ்க்கையில் காணப்படும் சாத்தானின் வல்லமை இப்பொழுதே முறியடிக்கப்படுவதாக. இப்பொழுது நான் பிசாசைக் கடிந்துகொண்டு, இயேசுகிறிஸ்துவின் வல்லமை இந்த கூட்டத்தினரின் மேல் இறங்கி, எல்லா வியாதிகளையும், உபத்திரவங்களையும், எல்லா சந்தேகங்களையும் நீக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். ஆண்டவரே, நீர் வந்து இவர்களை சுகப்படுத்தும். தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன்.